Tuesday, July 7, 2015

அகத்தீசர் 

அகத்தீசர் அவர்கள் அரும்பெரும் தவம் செய்தவர். அவரை காலையில் பத்து நிமிடம், "ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி" என்றும், மாலையில் அதேபோல் பத்து நிமிடம் நாமசெபம் செய்து வந்தால் அவர் பெற்ற பெரும் அருளை நமக்கு வழங்குவார்.

அவருடைய பாடல்கள் அத்தனையும் சாதாரண கல்வி கற்றவரும், எளிதில் படிக்கக்கூடிய முறையில் மிக ஆழமான கருத்துக்களை எளிய முறையில் பாடியுள்ளார். ஞானம் என்பதை உணரமுடியுமேயன்றி இன்னதென்று சொல்லமுடியாதது ஆகும். அது சாகாக்கல்வி ஆதலால் உடனேயே எடுத்தவெடுப்பில் அறியமுடியாதவொரு இரகசியம் ஆகும்.

நாம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வேதங்களையும் மற்றும் நூல்களையும் படித்தபோதிலும் அதிலுள்ள நுட்பங்கள் நமக்கு புரியாது. ஆனால் "ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி" என்று நாம ஜெபம் செய்தால் எல்லா நூல்களையும் படித்து அறிய முடியாத ஞான இரகசியங்களை நாமே அறிந்து உய்ய முடியும்.

...

அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்
அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான்
அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு
அவர்மனது அவரைப்போல் பெரியார் உண்டோ.

- மகான் காகபுஜண்டர்

...

அகத்தீசா என்றால் அனைத்தும் பெறலாம்

அன்பு பொருந்திய வாழ்விற்கு அகத்தீசா என்று கூறுங்கள்.
ஆக்கம் பெற்று வாழ அகத்தீசா என்று கூறுங்கள்.
இல்லறம் சிறக்க அகத்தீசா என்று கூறுங்கள்.
ஈகை குணம் பெற அகத்தீசா என்று கூறுங்கள்.
உண்மைப் பொருள் அறிய அகத்தீசா என்று கூறுங்கள்.
ஊக்கம் பெற அகத்தீசா என்று கூறுங்கள்.
எண்ணம் சித்திக்க அகத்தீசா என்று கூறுங்கள்.
ஏற்றம் பெற்றிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஐயம் நீங்கிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஒண்பொருள் பெற்றிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஓங்காரம் கண்டிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஔடதம் அறிந்திட அகத்தீசா என்று கூறுங்கள்.

ஓம் அகத்தீசாய நம!ஓம் அகத்தீசாய நம!ஓம் அகத்தீசாய நம!

ஓம் சிவாய அகத்தீசாய நம:

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி.

...

குருவணக்கம்

குருவழியே ஆதி ஆதி
குருமொழியே வேதம் வேதம்
குருவிழியே தீபம் தீபம்
குருபதமே காப்பு காப்பு.

குருவடி சரணம், திருவடி சரணம். குருவருளே திருவருள்.

No comments:

Post a Comment

கண் திருஷ்டி போக்கும் பைரவர் மூல மந்திரம் :

கண் திருஷ்டி  போக்கும் பைரவர் மூல மந்திரம் : மூல மந்திரம்   ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம்  ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம  இந்த மூ...