Friday, July 17, 2015

ஆன்மீக கதைகள்

தர்மன் நினைத்திருந்தால்?

மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறிய பிறகு,  பகவான் கிருஷ்ணரிடம் ஒரு கேள்வி கேட்கபட்டதாம்.  

கிருஷ்ணா... நீ பாண்டவர்கள் மேல் அளவில்லா அன்பு கொண்டவன்.  அவர்கள் நலனில் அக்கறை உள்ளவன்.  உன் தங்கை சுமித்ராவை  கூட ,  அர்சுனனுக்கு திருமணம் செய்து கொடுத்து இருக்கிறாய்.  

இப்படி இருக்க....பாண்டவர்கள் சூதாடி,  நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள்.  நீ நினைத்து இருந்தால் இதை தடுத்து இருக்க முடியாதா. 

அதற்கு கிருஷ்ணன் சொன்ன பதில் இதுதான்.

சூதாடுவது என்பது அரச தர்மம்.  தர்மன் சூதாடியத்தில் தவறு இல்லை.  ஆனால் துரியோதனன் சூதாட அழைத்த போதே என் சார்பாக மாமா சகுனி ஆடுவார் என்று திரியோதனன் சொன்னான்.  

ஆனால் தர்மனோ தான் என்ற எண்ணம் கொண்டு தானே ஆட முனைந்தான்.  தர்மன் என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால்,  முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும்.  

தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைமைக்கு காரணம்   என்றார்.

ஸ்ரீராமனும் தேரையும். 

ஒரு நாள் ஸ்ரீராமசந்திர மூர்த்தி குளிக்க ஆற்றுக்கு போனார்.  கையில் வில் இருந்தது.  பொதுவாக வீரர்கள் கையில் வில்லை எடுத்தால் எய்யாமல் வைக்க கூடாது.  

அப்படி வைக்கும் நிலைமை வந்தால் அதை பூமியில் தான் குத்தி வைக்க வேண்டும்.   அந்தநாள் ராமன் வில்லை ஆற்று கரையில் குத்தி வைத்து விட்டு குளிக்க சென்றார்.  

திரும்பி வந்து அம்பை எடுத்த போது,  வில்லின் நுனியில் ஒரு தேரை குத்து பட்டு துடித்து கொண்டிருந்தது.   அதை பார்த்த ராமன் துடித்து விட்டார்.  

யே.... தேரையே நான் வில்லை குத்தும் போதே நீ சத்தம் போட்டுருந்தால் இவ்வளவு நேரம் நீ வழியால் துடித்துருக்க மாட்டாயே.  ஏன் மௌனமாக இருந்து விட்டாய் என்று கேட்டார்.  

அதற்கு அந்த தேரை... பகவானே... எனக்கு எதாவது துன்பம் வந்தால் ராமா என்றுதான் அழைப்பேன்.  ஆனால் அந்த ராமனே என்னை துன்புறுத்தும் போது நான் யாரை அழைப்பது என்று தெரியவில்லை... அதனால் தான் அமைதியாக இருந்து விட்டேன் என்று சொன்னதாம்.  ராமனால் பதில் சொல்ல முடியவில்லை


No comments:

Post a Comment

கண் திருஷ்டி போக்கும் பைரவர் மூல மந்திரம் :

கண் திருஷ்டி  போக்கும் பைரவர் மூல மந்திரம் : மூல மந்திரம்   ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம்  ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம  இந்த மூ...