குரு பெயர்ச்சி பரிகாரம் 2015
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் முடிய)
பரிகாரம்: பிரதோஷ நாளன்று அருகிலுள்ள சிவாலயத்தில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ளலாம். நந்தியம்பெருமானுக்கு காப்பரிசி நைவேத்யம் செய்து சிவபக்தர்களுக்கு விநியோகம் செய்து வருவதால் காரியத்தடைகள் விலகும். நேரம் கிடைக்கும்போது தஞ்சாவூர் சென்று பெருவுடையாரையும், நந்தியம்பெருமானையும் பிரதோஷ நாளில் தரிசிப்பது நன்மை தரும்.
ரிஷபம்
(கார்த்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய)
பரிகாரம்: ஒரு வருட காலத்திற்கு பிரதி வெள்ளிதோறும் பஞ்சமுக குத்துவிளக்கு ஏற்றி வைத்து மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ர பாராயணம் செய்து வந்தால் மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். நேரம் கிடைக்கும்போது குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்து குமரி அம்மனையும், விவேகானந்தர் பாறையில் உள்ள அம்மனின் திருப்பாதங்களையும் தரிசிப்பது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3,4, திரு வாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் முடிய)
பரிகாரம்: குருப்பெயர்ச்சி நாளன்று அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று குருபகவானை தரிசித்து சிறப்பு அர்ச்சனை செய்து கொள்வது நல்லது. நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினருடன் சிதம்பரம் சென்று நடராஜப்பெருமானை தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்வதன் மூலம் கூடுதல் நன்மை அடைவீர்கள்.
கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய)
பரிகாரம்: திங்கள் தோறும் நாகாபரணத்துடன் கூடிய சிவபெருமானை தரிசிப்பது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது திருவண்ணாமலை சென்று அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து நாகாபரணம் சாற்றி வழிபடுவதால் வேண்டிய வரங்களைப் பெறுவீர்கள்.
சிம்மம்
(மகம், பூரம் , உத்திரம் 1ம் பாதம் முடிய)
பரிகாரம் : வருகின்ற ஒரு வருட காலத்திற்கு பிரதி வியாழன் தோறும் கொண்டைகடலை தானியத்தைப் பரப்பி அதன் மீது மூன்று நெய் விளக்குகளை வடக்குமுகமாக ஏற்றி வைத்து குருவிற்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவரை சிறப்பு பூஜைகளுடன் தரிசித்து வர நன்மை உண்டாகும்.
கன்னி
(உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய)
பரிகாரம் : பிரதி ஏகாதசி நாளன்று விரதம் இருந்து பெருமாளை தரிசித்த பின்பு உணவருந்துவது நல்லது. நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினருடன் திருப்பதி சென்று வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வர நினைத்த காரியங்கள் கைகூடுவதோடு வாழ்க்தை தரம் முன்னேற்றம் அடையும்.
துலாம்
(சித்திரை 1,2, ஸ்வாதி, விசாகம் 3 பாதம் முடிய)
பரிகாரம்: பிரதி வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கு தொடர்ந்து எலுமிச்சை விளக்கேற்றி வருவதால் சிரமங்கள் குறையும். நேரம் கிடைக்கும் போது பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் சென்று மதுரகாளியம்மனை தரிசித்து குங்குமார்ச்சனை செய்துகொள்வதும், அம்மனின் அருட்பிரசாதமான குங்குமத்தினை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்வதும் நல்லது.
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய)
பரிகாரம்: பிரதி செவ்வாய் தோறும் துவரை தானியத்தைப் பரப்பி அதன் மீது ஆறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து சுப்ரமணிய ஸ்வாமியை மானசீகமாக வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது அறுபடைவீடுகளுக்கும் சென்று வருவது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய)
பரிகாரம் : முக்கியமான பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் விநாயகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று சிதறுதேங்காய் உடைத்துவிட்டு காரியத்தைத் துவக்குவது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசிப்பதால் நலம் பெறுவீர்கள்.
மகரம்
(உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் முடிய)
பரிகாரம் : குருபகவானின் அஷ்டமத்துச் சஞ்சாரம் சிரமத்தினைத் தரும் என்பதால் ஒரு வருட காலத்திற்கு பிரதி வியாழன் தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வழிபட்டு வரவேண்டும். நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினருடன் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று அம்பிகையை தரிசிப்பதால் சிரமங்கள் விலகி நன்மை காண்பீர்கள்.
கும்பம்
(அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் முடிய)
பரிகாரம் : இந்த குருப்பெயர்ச்சி பாதகம் எதையும் ஏற்படுத்தாது என்பதால் சிறப்புப் பரிகாரம் தேவையில்லை. கிருஷ்ணரை வணங்கி நேரம் கிடைக்கும்போது புண்ணியநதிகளில் ஸ்நானம் செய்து முன்னோர்களுக்கான கடமையை சரிவர செய்து முடிப்பது நல்லது. இல்லத்தில் அமாவாசை தோறும் தவறாது முன்னோர் வழிபாடு செய்து ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யவும். குலதெய்வ வழிபாடு மன நிம்மதி தரும்.
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய)
பரிகாரம்: வேம்புடன் கூடிய அரசமரத்திற்கு பிரதி திங்கட்கிழமை தோறும் நீருற்றி பூஜை செய்து வருவது நல்லது. வேதம் பயிலும் மாணவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதால் குரு பகவானின் திருவருளுக்குப் பாத்திரமாவீர்கள். நேரம் கிடைக்கும்போது ராமேஸ்வரம் சென்று 21 தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து ராமநாத ஸ்வாமியை தரிசனம் செய்ய நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறும்.
Wednesday, July 8, 2015
Subscribe to:
Post Comments (Atom)
கண் திருஷ்டி போக்கும் பைரவர் மூல மந்திரம் :
கண் திருஷ்டி போக்கும் பைரவர் மூல மந்திரம் : மூல மந்திரம் ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம இந்த மூ...
-
இரவில் நன்றாக தூக்கம் வர: 1. தூங்க செல்வதற்கு முன்பு கதகதப்பான பாலில் தேன் விட்டு சாப்பிட தூக்கம் நனறாக வரும். 2. வெள...
-
சக்தி வாய்ந்த ஸ்ரீ கால பைரவர் மஹா மந்திரம்: மஹா மந்திரம்: ஓம் ஹ்ரீம் பும் பாதுகாய அபதூதாரணாய குரு குரு பாதுகாய ஹ்ரீம் ஓம் நமஹ ஷியாயே ...
-
பாண்டவ தூத பெருமாள் : பாண்டவ தூத பெருமாள் கோவில் பல்லவர்களால் 8 ஆம் நூற்றாண்டில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்காக கட்டப்பட்டது .இந்த கோவில் ...
No comments:
Post a Comment