Monday, July 20, 2015

Thathuvangal

Thathuvams

Thookam vandha kanna moodalam, aana Vomit vandha vaaya mooda mudiyadhu..

                      ******************

Enna dhan neenga VIJAY rasigar  a irundhalum, Fan unga mela vizhum bodhu
ayyo THALA nu dhan soluveenga..
                ******************
Thoonga poradhuku munnadi thoonga porenu sollalam, aana Ezhundhurkathuku
munadi ezhundhuka porenu solla mudiyadhu.
                ******************           
Naai ku naalu kaal irundhalum, adhala kaal mela kaal potu ukara mudiyadhu.
                ******************
Jokes

Friend 1    : En kitta vangina 100 ruba epo kudupa ?
Friend 2    : Nan marandhuten, neeyum marandhuthenu nenaichen..
                ******************
One rainy day, an old man selling books..

A man came asked the book how much ?

The old man replied that it costs rs.3000..
but the man bargained, the old man didnt reduce the amount.. At last,
he bought the book. The old man warned him not to open the last page, if he
opened that he will face consequences.. The man feared and accepted..
But, he went to home. He started reading the book and finished. at last he decided to

open the final page. He shocked.....

It shows Book costs Rs.30/- only...   
                ******************   
In KBC,

Amitabh to sardar, Ganges flows in which state ?
Sardar replied " Liquid state "..
All the people started clapping, amitabh stunned and look all the people are sardars..
                ******************
Sardar's friend asked sardar to book two tickets in corner seat for him and his lover.
Wen he entered in theatre he shocked, bcoz sardar booked the seat left corner for him

and right corner for his lover..
                ******************
Sardar walking on a road and saw a black particles,
and he touch and lick it and says,
" Ada chee saani, nalla vela midhikala "..
                ******************
A girl went to heaven and Yama asked her last wish ??
She replied that she love her lover purely and want to live with them forever..
And the girl sent to hell for overacting...
                ******************

Height of Love :

A boy didnt reply msg his lover, b coz if he msg her, she ll get pain while typing..

                ******************
Height of confusion :

Your friend fall down from 2nd floor in your brand new Mercedes Benz, you don't

whether laugh or cry..

                ******************
A man says, I think to stop Cigarette.. But for thinking, i need Cigarette....

Evergreen SMS jokes

Evergreen SMS jokes

Sardar watching a ice bar for a long time. His friend asking him,
" Yenda adha romba nerama pakara ".  

Sardar replied " Naanum
romba neram pakaren, engandhu thanni olugudhune therila.
            *******
Interviewer to sardar

Interviewer : Do you know MS-OFF ?
Sardar         : Address thaanga poitu varen.

            *******
A drunken man fell from 1st floor. All people assembled and asking the man
" what happened sir " ?
He replied " Enaku epdi theriyum, naanum ippa than vandhen "...

Sardar shifted his barbar shop from 1st floor to Ground floor and
displayed in board like this,
" Indru mudhal KEEZHE CUTTING seiyapadum ".

            *******
Father to son

Father : Yenda eppa pathalum naan unna adichite irukene unaku kovame
               varadha..
Son     : Varume...
Father : Appo enna pannuva ?
Son     : Poi toilet-a clean panuven.
Father : Adhula epdi unnadaya kovam adangum..
Son     : Unga tooth brush a dhan clean panna use pannuven..
   
            *******
A Train got accident and stumbled in field and stops... Sardar is driver..

Passengers : Wat happened sir ?
Sardar        : While i m driving a man came in front of track...
Passengers :  For that man, u endangered all d passengers.. u have to hit him..
Sardar          :  I trying to hit him, but he ran into fields.. Thats why i drive the train
                        into fields to kill him.

            *******
Son              : I want a bike..
Father       : Why god gave u two legs.
Son              : One leg to start bike and another leg to apply gear.

            *******

Student       : I want 2 days leave.
Teacher       : Yesterday u asked 1 day and now asking 2 days leave. What ?
Student       : Yesterday i had headache. Only 1 head ha.. but, legs are two.. thats y         

asked 2 days leave...
Student       : I had toothache.. i need 32 days leave...

            *******
Sardars helicopter got accident.. Reporters asked sardar wat happened ?

Sardar        : Mela poite irundhena, romba kulirichu, adhan FAN-a off paniten..

            *******
A girl and a boy in park..

A girl had a boy photo in her hand.. Suddenly boy asking her, Is he ur ex-boy friend ?

Girl        : No, thats me before operation..
Boy         : !!!!!?!

            ********

Sardar goes to a fancy shop..

Sardar        : India flag iruka  ?
shop owner : Indhanga india flag..
Sardar       : Hmmm..Vera colour illaya ?
shop owner : !!!?@!!

   
               

Friday, July 17, 2015

தரமான ஜோக்ஸ்

நோயாளி : ஆபரேஷனுக்கு ஐயாயிரம் ரூபாய்னுதானே சொன்னீங்க? இப்போ ஐயாயிரத்து ஐம்பது ரூபாய் னு பில் போட்டிருக்கீங்களே?டாக்டர்: அதுவா. அது நான் உன்னோட வயத்திலெ மறந்து வச்சுட்ட கத்திரிக்கோலின் விலையும் சேர்த்திருக்கேன்!
                  * * * * * * * * * * * * *     
"வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட ஏன் பல்லை ஈ ன்னு காண்பிக்கிறீங்க?"
அவங்க என்,"சொத்தை"யெல்லாம் காமிக்கச் சொன்னாங்களே!
                      * * * * * * * * * * * * *
"நேத்து, நம்ம தலைவர் பத்திரிகையாளர் கூட்டத்தில நம்ம மானத்தை வாங்கிட்டாரு!".
"எப்படி?".
" 'பிரசார் பாரதி பற்றி உங்க அபிப்பிராயம் என்ன' ன்னு கேட்டப்போ, 'அவர் ரொம்ப நல்ல கவிஞர்'னு சொல்லிட்டாரு!"
****
"அந்தக் காலத்தில நான், ஒருநாளைக்குப் பத்து ஆபரேஷன் பண்ணுவேன்!".

"இறந்த காலம்னு சொல்லுங்க!".

சிறந்த ஜோக்ஸ்

சிறந்த ஜோக்ஸ்

சுட்டிப்பையன் : சார் , என் தலை ' ல எரும்பு ஏறுது பாருங்க ..!
வாத்தியார் : அதை எடுத்து போடாம , ஏண்டா என்கிட்ட சொல்ற ?
சுட்டிப்பையன் : நீங்க தானே சார் சொன்னீங்க ,! என் தலை' ல ஒன்னுமே ஏறலனு ?
 * * * * * * *
கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?
மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......
 * * * * * * *
கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!
 * * * * * * *
ன்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..
நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .
 * * * * * * *
ரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர்.
அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர்.
அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர்.
மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றிருந்தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடுகிறது என்றார்.
 * * * * * * *
நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 19 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?
டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! " கொழுப்பு"..

சிரிக்கலாம் வாங்க

சிரிக்கலாம் வாங்க 

சிறுவன் யர்னி தனது மாமா நியூட்டனிடம், நீங்கள்
அந்த புதிய டிரம் செட் வாங்கித் தந்ததற்கு மிகவும் நன்றி. எனக்கு வாங்கிக்
கொடுத்தவைகளிலேயே மிகவும் சிறந்த்து இதுதான் – என்றான்.
அப்படியா, இதைக் கேட்க எனக்கு மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறது – என்றார்.
ஆமாம், நான் ஏற்கனவே பணம் சம்பாதிக்க ஆரம்பித்து
விட்டேன் – என்றான்.
அப்படியா, பணமா, நீ தொழில்முறையில் வாசிக்க
ஆரம்பித்துவிட்டாயா – என்றார்.
ஒருவகையில் அப்படித்தான், அம்மா தினமும் ஒரு
டாலர் நான் பகலில் வாசிக்காமலிருக்கத் தருகிறாள், தாத்தா வாரம் பத்து டாலர் நான்
இரவில் வாசிக்காமலிருக்கத் தருகிறார், எப்படி – என்றான் யர்னி.
இதுபோலவே உன் வாழ்வு இருக்கிறது. பணத்திற்காக
அடுத்தவர்களுக்கு உதவிசெய்வதும், உழைப்பதும் போய் அடுத்தவர்களை தொந்தரவு
செய்வதும், ஏமாற்றுவதும் கூட நியாயமாய், தொழிலாய் ஆகிவிட்டது.

 

 

குரு மலர்தல்

குரு மலர்தல்

ஒரு பழமையான சீனக் கதை கூறுகிறேன்.
மிகப் பெரிய மடாலயம் ஒன்றில் ஒரு குரு இருந்தார். அதில் 5000 பிட்சுக்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் தியான பாதையை – தன்னை உணர்தல் – பின்பற்றினர். தன்னை உணர்தல் புத்தர் கூறிய வழிகளில் ஒன்று.
ஒருநாள் ஒரு மனிதன் அந்த மடாலயத்திற்கு வந்தான். அவன் ஒரு சீடனாக விரும்பினான். குரு அவனை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவன் கிராமத்தான், படிக்காதவன், எளிமையானவன். அதனால் குரு அவனிடம், சமையலறையில் போய் அரிசியை சுத்தம் செய்வதுதான் உன் வேலை என்றார்.
அங்கு சமையலறை மிகப் பெரியது. 5000 துறவிகளுக்கானது. இந்த ஏழை அதிகாலையில் அரிசியை சுத்தம் செய்ய ஆரம்பித்தால் இரவு வரை செய்தான். சொற்பொழிவுகளுக்கோ, பிரார்த்தனைகளுக்கோ போக அவனுக்கு நேரமில்லை.. சமய நூல்களை படிக்கவோ, ஆன்மீக விவாதங்களை கேட்கவோ அவனுக்கு நேரமில்லை. இந்த 5000 துறவிகளும் பண்டிதர்கள். அதனால் இந்த மடாலயம் நாடு முழுவதும் ஆன்மீக விவாதங்களுக்கு மிகவும் பெயர் போனது.
இருபது வருடங்கள் கடந்தன. அந்த மனிதன் இத்தனை ஆண்டுகளாக அரிசியை சுத்தம் செய்வதை தவிர வேறெதுவும் செய்யவில்லை. அவன் வருடங்களை கணக்கிடுவதை மறந்துவிட்டான். என்ன பயன் அவன் நாட்களை, தேதிகளை என யாவற்றையும் மறந்தான். இறுதியில் அவன் தனது பெயரைக் கூட மறந்துவிட்டான். இருபது வருடங்களாக யாரும் அதை உபயோகிக்கவில்லை. யாரும் அவனை பெயர் சொல்லிக் கூப்பிடவில்லை. அது அவனது பெயர்தானா என்பதுகூட அவனுக்கு சந்தேகமாகிவிட்டது. இருபது வருடங்களாக அவன் அரிசியை சுத்தம் செய்யும் ஒரே ஒரு சிறிய விஷயத்தை மட்டுமே தொடர்ந்து செய்து வந்தான். காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்க போகும் வரை அதை மட்டுமே செய்தான்.
குரு தான் இறக்கும் நேரம் வந்துவிட்டதை அறிவித்தார். அவர் தனது வாரிசை தேர்ந்தெடுக்க விரும்பினார். அதற்காக அவர் ஒரு அறிவிப்பு செய்தார். தன்னை உணர்ந்து விட்டதாக யாராவது நினைத்தால் அவர் உண்மையை உணர்ந்த விதமாக ஏதாவது ஒரு வாக்கியத்தை எனது குடிலின் சுவற்றில் எழுத வேண்டும் எனக் கூறினார்.
அந்த மடத்தில் உள்ள துறவிகளிலேயே தன்னை மிகச் சிறந்த பண்டிதராக நினைத்த ஒருவர் முயற்சித்தார். ஆனால் அவர் அந்த குடிலின் சுவரில் எழுதிய வாசகம் அவருடைய சொந்த அனுபவம் அல்ல. அது அவருக்கும் தெரியும். எப்படி அது அவருக்குத் தெரியாமல் போகும் அவர் நூல்களிலிருந்து எடுத்ததுதான் அது. இந்த வயதான குருவை ஏமாற்றுவது மிகவும் கடினம். சொந்த அனுபவத்திலிருந்து வந்தது அல்ல இது என அவர் எளிதாக கண்டுபிடித்துவிடுவார் என பயந்தார். அதனால் அவர் தனது பெயரை எழுதவில்லை.
காலையில் வயதான குரு வந்து பார்த்துவிட்டு வேலையாளை கூப்பிட்டு அங்கு எழுதியிருந்ததை அழித்துவிடும்படி கூறு, எனது சுவற்றை பாழடித்த முட்டாள் யாரென்று கண்டுபிடி. என்றார். அந்த பண்டிதர் குரு இது ஒரு சிறப்பான உணர்தல் என பாராட்டினால் பின் நான்தான் இதை எழுதினேன் எனக் கூறலாம். இல்லாவிடில் மௌனமாக இருந்து விடலாம். யாருக்குத் தெரியும். 5000 பேரில் யார் வேண்டுமானாலும் இப்படி எழுதக் கூடும் என நினைத்ததால் அவர் அதில் கையொப்பமிடவில்லை.
கிட்டத்தட்ட பன்னிரண்டு பண்டிதர்கள் முயற்சித்தனர். ஆனால் யாருக்கும் தனது பெயரை எழுத தைரியம் வரவில்லை. குரு எல்லா நாளும் அழித்து வந்தார். அவர், தன்னை உணரும் பக்குவம் உங்களில் யாருக்கும் வரவில்லை. தான் என்ற பெயரில் எல்லோரும் நானைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளீர்கள். நான் உங்களுக்கு திரும்ப திரும்பக் கூறி வந்திருக்கிறேன். ஆனால் நான் என்பது ஒரு சுகம், அதிலும் ஆன்மீக நான் என்பது மற்ற எல்லா வகையான நான்களை விட மிகவும் சுகமானது. அதனால் அடுத்த தலைமை யார் என நானே கண்டு பிடிக்கிறேன். என்றார்.
ஒருநாள் இரவு வயதான குரு இருபது வருடங்களுக்கு முன் வந்த மனிதனிடம் சென்றார். இருபது வருடங்களாக அவன் அரிசியை சுத்தம் செய்வதைத் தவிர வேறெதுவும் செய்யாததால் குருவை அவன் பார்க்கவே இல்லை. குரு அவனை எழுப்பினார். அந்த மனிதன் குருவைப் பார்த்து யார் நீ எனக் கேட்டான். ஏனெனில் இருபது வருடங்களுக்கு முன் தீட்சையளித்த போது சில நிமிடங்கள் தான் பார்த்தான். அதனால் என் தூக்கத்தைக் கெடுத்ததன் காரணம் என்ன எனக் கேட்டான். குரு, நான்தான் உன் குரு. மறந்து விட்டாயா உனக்கு உன் பெயராவது நினைவில் இருக்கிறதா எனக் கேட்டார்.
அந்த மனிதன் அது சிரமம். ஏனெனில் நீங்கள் எனக்கு கொடுத்த வேலையை செய்ய பெயர், புகழ், படிப்பு, பதவி, பட்டம் என எதுவும் தேவையில்லை. இது மிக எளிமையான வேலை. எனவே நான் எல்லாவற்றையும் மறந்து விட முடிகிறது. இதுதான் எனது பெயர் என என்னால் உறுதியாக கூற முடியவில்லை. சில பெயர்கள் எனது நினைவுக்கு வருகிறது. ஆனால் அதில் எது என்னுடையது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் உங்களுக்கு மிகவும் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். எனக் கூறி அவர் குருவின் பாதத்தில் விழுந்தார்.
தயவுசெய்து எனது வேலையை மாற்றி விடாதீர்கள். நான் எல்லாவற்றையும் மறந்து விட்டேன். ஆனால் நான் எல்லாவற்றையும் அடைந்து விட்டேன். நான் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு நிலை இப்போது எனக்கு கிடைத்து விட்டது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு மௌனத்தை நான் அடைந்து விட்டேன். சில சமயங்களில் நான் பேரானந்த நிலையை உணர்கிறேன். அந்த தருணங்களில் இறந்தால் கூட நான் வருத்தம் கொள்ள மாட்டேன், வாழ்க்கை என்னை வஞ்சித்துவிட்டது எனக் கூற மாட்டேன். என் தகுதியை விட அதிகமாகத்தான் அது எனக்கு அளித்திருக்கிறது. எனது வேலையை மாற்றி விடாதீர்கள். நான் அதை நன்றாகத் தான் செய்திருக்கிறேன். யாராவது எனது வேலையை பற்றி புகார் கூறினார்களா என்றார்.
குரு, இல்லை, யாரும் புகார் கூற வில்லை. ஆனால் உனது வேலை மாறி விட்டது, ஏனெனில் உன்னைத்தான் எனக்கு அடுத்த தலைமையாக தேர்ந்தெடுத்திருக்கிறேன். என்றார்.
அந்த மனிதன், நான் அரிசி சுத்தம் செய்பவன். குருவாக இருப்பதைப் பற்றியோ, சீடர்களைப் பற்றியோ எனக்கு எதுவுமே தெரியாதே. எனக்கு எதுவும் தெரியாது என்னை மன்னித்து விடுங்கள். நான் தலையை பதவியை ஏற்க வில்லை. ஏனெனில் அவ்வளவு பெரிய பதவியை சமாளிக்க என்னால் முடியாது. எனக்கு அரிசி சுத்தம் செய்ய மட்டுமே தெரியும். என்றான்.
குரு, மற்றவர்கள் அடைய முயற்சி செய்து தோல்வியுற்றனர். அதில் நீ வெற்றி பெற்று விட்டாய். நீ முயற்சி செய்யாததால் நீ அடைந்து விட்டாய். நீ இந்த சிறிய விஷயத்தை மட்டுமே செய்து கொண்டிருந்தாய். அதில் நினைவுகளுக்கோ, உணர்ச்சிகளுக்கோ, கோபத்துக்கோ, போராட்டத்துக்கோ, ஒப்பிடுதலுக்கோ, லட்சியங்களுக்கோ, இடமில்லை. அதனால் மெதுமெதுவாக உனது அகந்தை அழிந்து விட்டது. அந்த அகந்தையுடன் உனது பெயரும் அழிந்தது. நீ பெயருடன் பிறக்கவில்லை. அகந்தைதான் பெயருடன் இருந்தது. அதுதான் அகந்தையின் ஆரம்பம்.
ஏனெனில் அந்த அகந்தை தான் உன்னை என்னிடம் கொண்டு வந்தது. அகந்தை அழிந்ததின் விளைவாக நீ உனது குருவான என்னைக் கூட மறந்து விட்டாய். அந்த வினாடி வரை ஆன்மீக லட்சியபாதையில் இருந்தாய். இப்போது நீ அடைந்து விட்டாய். நீதான் சரியானவன். அதனால் எப்போதும் குரு அவரது அடுத்த வாரிசுக்கு கொடுக்கும் இந்த அங்கி, இந்த தொப்பி, இந்த வாள் ஆகிய எல்லாவற்றையும் பெற்றுக் கொள். ஆனால் ஒரு விஷயம் நினைவில் கொள். இவற்றை பெற்றுக் கொண்டு இந்த மடத்தை விட்டு எவ்வளவு தூரம் போக முடியுமோ, அவ்வளவு தூரம் ஓடிப் போய்விடு. ஏனெனில் உனது உயிர் அபாயத்தில் உள்ளது. இந்த அகந்தை பிடித்த 5000 பேரும் உன்னைக் கொன்று விடுவார்கள். நீ மிகவும் எளிமையாக, வெகுளியாக, இருப்பதால் அவர்கள் உன்னிடம் வந்து அங்கி, தொப்பி, வாள் இவற்றை கேட்பார்கள். நீயும் கொடுத்துவிடுவாய். நீ இவற்றை எடுத்துக் கொண்டு எவ்வளவு தூரம் போக முடியுமோ அவ்வளவு தூரம் மலை ஏறி போய்விடு.
விரைவில் எப்படி மலர் மலர்ந்தால் தேனீக்கள் தேடி வருமோ அதுபோல மக்கள் உன்னை வந்தடைவர். நீ மலர்ந்து விட்டாய். நீ சீடர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. வெகு தொலைவான ஒரு இடத்தில் வெறுமனே அமைதியாக இருந்தால் போதும், மக்கள் உன்னைத் தேடி வருவர். நீ என்ன செய்தாயோ, அதையே மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடு. என்றார்.
ஆனால் என்ற அந்த மனிதன் நான் எந்த பாடத்தையும் படிக்கவில்லை. எப்படி சொல்லிக் கொடுப்பது என எனக்குத் தெரியாதே. என்றான்.
குரு, சிறிய விஷயங்களை அமைதியாக, மௌனமாக, எந்த குறிக்கோளும் இல்லாமல். இந்த உலகத்திலோ, அடுத்த உலகத்திலோ எதையாவது பெற வேண்டும் என்ற ஆசையின்றி, செய்யச் சொல். அப்போதுதான் வெகுளித்தனமானவனாக, ஒரு குழந்தையை போல மாற முடியும். அந்த வெகுளித்தனம்தான் உண்மையான ஆன்மீகம் என்பதை சொல்லிக் கொடு. என்றார்.
ஆன்மீக கதைகள்

தர்மன் நினைத்திருந்தால்?

மகாபாரத யுத்தம் முடிந்து பாண்டவர்கள் அரியணை ஏறிய பிறகு,  பகவான் கிருஷ்ணரிடம் ஒரு கேள்வி கேட்கபட்டதாம்.  

கிருஷ்ணா... நீ பாண்டவர்கள் மேல் அளவில்லா அன்பு கொண்டவன்.  அவர்கள் நலனில் அக்கறை உள்ளவன்.  உன் தங்கை சுமித்ராவை  கூட ,  அர்சுனனுக்கு திருமணம் செய்து கொடுத்து இருக்கிறாய்.  

இப்படி இருக்க....பாண்டவர்கள் சூதாடி,  நாட்டை இழந்து, நாடோடியாய் காட்டில் அலைந்தார்கள்.  நீ நினைத்து இருந்தால் இதை தடுத்து இருக்க முடியாதா. 

அதற்கு கிருஷ்ணன் சொன்ன பதில் இதுதான்.

சூதாடுவது என்பது அரச தர்மம்.  தர்மன் சூதாடியத்தில் தவறு இல்லை.  ஆனால் துரியோதனன் சூதாட அழைத்த போதே என் சார்பாக மாமா சகுனி ஆடுவார் என்று திரியோதனன் சொன்னான்.  

ஆனால் தர்மனோ தான் என்ற எண்ணம் கொண்டு தானே ஆட முனைந்தான்.  தர்மன் என் சார்பாக கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லி இருந்தால்,  முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும்.  

தர்மன் செய்த தவறுதான் இந்த நிலைமைக்கு காரணம்   என்றார்.

ஸ்ரீராமனும் தேரையும். 

ஒரு நாள் ஸ்ரீராமசந்திர மூர்த்தி குளிக்க ஆற்றுக்கு போனார்.  கையில் வில் இருந்தது.  பொதுவாக வீரர்கள் கையில் வில்லை எடுத்தால் எய்யாமல் வைக்க கூடாது.  

அப்படி வைக்கும் நிலைமை வந்தால் அதை பூமியில் தான் குத்தி வைக்க வேண்டும்.   அந்தநாள் ராமன் வில்லை ஆற்று கரையில் குத்தி வைத்து விட்டு குளிக்க சென்றார்.  

திரும்பி வந்து அம்பை எடுத்த போது,  வில்லின் நுனியில் ஒரு தேரை குத்து பட்டு துடித்து கொண்டிருந்தது.   அதை பார்த்த ராமன் துடித்து விட்டார்.  

யே.... தேரையே நான் வில்லை குத்தும் போதே நீ சத்தம் போட்டுருந்தால் இவ்வளவு நேரம் நீ வழியால் துடித்துருக்க மாட்டாயே.  ஏன் மௌனமாக இருந்து விட்டாய் என்று கேட்டார்.  

அதற்கு அந்த தேரை... பகவானே... எனக்கு எதாவது துன்பம் வந்தால் ராமா என்றுதான் அழைப்பேன்.  ஆனால் அந்த ராமனே என்னை துன்புறுத்தும் போது நான் யாரை அழைப்பது என்று தெரியவில்லை... அதனால் தான் அமைதியாக இருந்து விட்டேன் என்று சொன்னதாம்.  ராமனால் பதில் சொல்ல முடியவில்லை


Wednesday, July 15, 2015

ஹோம மந்திரங்களும், பலன்களும்

ஹோம மந்திரங்களும், பலன்களும்

1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.

2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.

3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.

4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.

5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.

6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.

7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.

8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.

9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.

10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.



11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.

12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.

13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.

14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.

15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.

16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.

17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.

18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.

19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.



20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.

21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.

22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.

23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.

24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.

25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.

26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.

 

27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.

28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.

29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.

30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.

31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.

32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.

33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.

34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.

35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.

36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.

37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.

38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.

39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.

 

40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.

41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.

42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.

43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.



44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.

45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.

46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.

47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.




ஹரிஹர மந்த்ரம்
" ஓம் ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவாய "
தோஷ பரிகாரங்கள்

ஜாதகப்படி ஒவ்வொரு திசா புக்தி அந்தரங்களில் கண்டு பயப்படுவது இயல்பு தானே. அத்தகைய கொடிய
திசாபுக்தி நாதன் எவரோ அந்த கிழமை அன்று  கீழ்க்கண்ட பொருட்களை தானம் செய்தால் தோஷங்கள்
நீங்கி நன்மை அடைவது திண்ணம் ஆகும்.


சூரியனுக்கு உண்டான பரிகாரம்
உப்பு, நெய் வெல்லம் கலந்த அடைகளோடு சேர்த்து ஹீரண்யம், தாம்பூலம், கோதுமை வைத்து தானம்
செய்தால் ரோகங்கள் நீங்கும்.

சந்திரனுக்கு உண்டான பரிகாரம்

திங்கள் அன்று நெல் ( அ ) பச்சரிசி, வெண்ணிறமான ஆடை, உப்பு, வெல்லம், நெய், இனிப்பு செய்து தானம்
கொடுப்பது எல்லா வித மங்கள்மும் உண்டாகும்.

செவ்வாய்க்கு உண்டான பரிகாரம்

செவ்வாய்கிழமை மரக்கட்டைகளை தானம் செய்தால் (உதாரணம் - சந்தன, அகில் மற்றும் சமித்துகுச்சிகளை
தானம் செய்யலாம்.) எதிரிகள் தொல்லை ஒழியும்.

புதனுக்கு உண்டான பரிகாரம்

புதன்கிழமைகளில் ஏழைகுழந்தைகளுக்கு (அ) அனாதை குழந்தைகளுக்கு பொம்மைகள் வாங்கி அவற்றுடன்
இனிப்புகள் தானமாக கொடுப்பதால் நமது குழந்தைகளுக்கு பல வித நன்மைகள் உண்டாகும்.

குருபகவானுக்கு உண்டான பரிகாரம்
குருவாரத்தில் மஞ்சள் நிறமுள்ள உடைகளுடன் மஞ்சள் நிற இனிப்புகளை தானம் செய்வதால் தேக புஷ்டியும்
மனத்திற்கு மகிழ்ச்சியும் தொழில் முன்னேற்றமும் உண்டாகும்.

சுக்கிரபகவானுக்கு உண்டான பரிகாரம்

வளர்பிறை வெள்ளியில் வெண்ணீற வஸ்திரம் வெள்ளி பொருள்கள் உடன் வெண்ணிறமான குதிரை தானம்
செய்வதால் பெண்களிடம் சந்தோஷமாகவும், சுகபோக பாக்கியத்தையும், மனைவியிடம் ஒற்றுமை உண்டாகும்.

சனிபகவானுக்கு உண்டான பரிகாரம்
சனிக்கிழமை நல்லெண்ணை தானம் செய்வதால் சனிபகவான் ப்ரிதியடைந்து ஆயுள் விருத்தி ஆகும். தொடர்ந்து
7 வாரம் தானம் செய்ய வேண்டும்.

ராகு, கேதுக்களுக்கு அது எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டின் அதிபதிக்கு உண்டான மேலே நாட்களுக்கு
உண்டான வாரத்தில் மேலே குறிப்பிட்டு உள்ளபடி பரிகாரம் செய்து கொள்ளலாம்.

 

Wednesday, July 8, 2015

குரு பெயர்ச்சி பரிகாரம் 2015


மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் முடிய)


பரிகாரம்: பிரதோஷ நாளன்று அருகிலுள்ள சிவாலயத்தில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ளலாம். நந்தியம்பெருமானுக்கு காப்பரிசி நைவேத்யம்  செய்து சிவபக்தர்களுக்கு விநியோகம் செய்து வருவதால் காரியத்தடைகள் விலகும். நேரம் கிடைக்கும்போது தஞ்சாவூர் சென்று பெருவுடையாரையும்,  நந்தியம்பெருமானையும் பிரதோஷ நாளில் தரிசிப்பது நன்மை தரும்.
ரிஷபம்
(கார்த்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய)


பரிகாரம்: ஒரு வருட காலத்திற்கு பிரதி வெள்ளிதோறும் பஞ்சமுக குத்துவிளக்கு ஏற்றி வைத்து மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ர பாராயணம் செய்து  வந்தால் மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். நேரம் கிடைக்கும்போது குடும்பத்துடன் கன்னியாகுமரி சென்று திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம்  செய்து குமரி அம்மனையும், விவேகானந்தர் பாறையில் உள்ள அம்மனின் திருப்பாதங்களையும் தரிசிப்பது நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3,4, திரு வாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் முடிய)


பரிகாரம்: குருப்பெயர்ச்சி நாளன்று அருகிலுள்ள சிவாலயத்திற்கு சென்று குருபகவானை தரிசித்து சிறப்பு அர்ச்சனை செய்து கொள்வது நல்லது. நேரம்  கிடைக்கும்போது குடும்பத்தினருடன் சிதம்பரம் சென்று நடராஜப்பெருமானை தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்வதன் மூலம் கூடுதல் நன்மை  அடைவீர்கள்.
கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய)


பரிகாரம்: திங்கள் தோறும் நாகாபரணத்துடன் கூடிய சிவபெருமானை தரிசிப்பது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது திருவண்ணாமலை சென்று  அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து நாகாபரணம் சாற்றி வழிபடுவதால் வேண்டிய வரங்களைப் பெறுவீர்கள்.

சிம்மம்
(மகம், பூரம் , உத்திரம் 1ம் பாதம் முடிய)


 பரிகாரம் : வருகின்ற ஒரு வருட காலத்திற்கு பிரதி வியாழன் தோறும் கொண்டைகடலை தானியத்தைப் பரப்பி அதன் மீது மூன்று நெய்  விளக்குகளை வடக்குமுகமாக ஏற்றி வைத்து குருவிற்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது  குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவரை சிறப்பு பூஜைகளுடன் தரிசித்து வர நன்மை உண்டாகும்.
கன்னி
(உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய)
 


பரிகாரம் : பிரதி ஏகாதசி நாளன்று விரதம் இருந்து பெருமாளை தரிசித்த பின்பு உணவருந்துவது நல்லது. நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினருடன்  திருப்பதி சென்று வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வர நினைத்த காரியங்கள் கைகூடுவதோடு வாழ்க்தை தரம் முன்னேற்றம் அடையும்.

துலாம்
(சித்திரை 1,2, ஸ்வாதி, விசாகம் 3 பாதம் முடிய)

பரிகாரம்:  பிரதி வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்கைக்கு தொடர்ந்து எலுமிச்சை விளக்கேற்றி வருவதால் சிரமங்கள் குறையும். நேரம் கிடைக்கும்  போது பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் சென்று மதுரகாளியம்மனை தரிசித்து குங்குமார்ச்சனை செய்துகொள்வதும், அம்மனின் அருட்பிரசாதமான  குங்குமத்தினை தினமும் நெற்றியில் இட்டுக்கொள்வதும் நல்லது.

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய)

பரிகாரம்: பிரதி செவ்வாய் தோறும் துவரை தானியத்தைப் பரப்பி அதன் மீது ஆறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து சுப்ரமணிய ஸ்வாமியை  மானசீகமாக வழிபட்டு வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது அறுபடைவீடுகளுக்கும் சென்று வருவது நன்மை தரும்.

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய)

பரிகாரம் : முக்கியமான பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் விநாயகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று சிதறுதேங்காய் உடைத்துவிட்டு காரியத்தைத் துவக்குவது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசிப்பதால் நலம் பெறுவீர்கள்.

மகரம்
(உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் முடிய)

பரிகாரம் : குருபகவானின் அஷ்டமத்துச் சஞ்சாரம் சிரமத்தினைத் தரும் என்பதால் ஒரு வருட காலத்திற்கு பிரதி வியாழன் தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வழிபட்டு வரவேண்டும். நேரம் கிடைக்கும்போது குடும்பத்தினருடன் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று அம்பிகையை தரிசிப்பதால் சிரமங்கள் விலகி நன்மை காண்பீர்கள்.

கும்பம்
(அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் முடிய)

பரிகாரம் : இந்த குருப்பெயர்ச்சி பாதகம் எதையும் ஏற்படுத்தாது என்பதால் சிறப்புப் பரிகாரம் தேவையில்லை. கிருஷ்ணரை வணங்கி நேரம் கிடைக்கும்போது புண்ணியநதிகளில் ஸ்நானம் செய்து முன்னோர்களுக்கான கடமையை சரிவர செய்து முடிப்பது நல்லது. இல்லத்தில் அமாவாசை தோறும் தவறாது முன்னோர் வழிபாடு செய்து ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யவும். குலதெய்வ வழிபாடு மன நிம்மதி தரும்.

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பரிகாரம்: வேம்புடன் கூடிய அரசமரத்திற்கு பிரதி திங்கட்கிழமை தோறும் நீருற்றி பூஜை செய்து வருவது நல்லது. வேதம் பயிலும் மாணவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதால் குரு பகவானின் திருவருளுக்குப் பாத்திரமாவீர்கள். நேரம் கிடைக்கும்போது ராமேஸ்வரம் சென்று 21 தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்து ராமநாத ஸ்வாமியை தரிசனம் செய்ய நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறும்.


 
குரு பெயர்ச்சி பலன்கள் 2015

மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் முடிய)


உங்களுக்கு இதுவரை 4ல் இருந்த குரு 5ம் இடத்தில் பிரவேசிக்கிறார். விலகிச் சென்ற நண்பர்கள் உறவினர்கள் நெருங்கி வந்திடுவர்.
இல்லத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சிலருக்கு மழலைச் செல்வம் உண்டாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. கௌரவம் குறைவது மாதிரியான சம்பவங்கள் இதுவரை
நடந்திருந்தால், அவை விலகி ஒரு மறுமலர்ச்சி தோன்றும். வியாதிகள் இருந்தால் குணமடையும். குருவின் பார்வை படும் ராசியும், ராசிக்கு 9ம் இடம் மற்றும் லாபஸ்தானமும் நல்ல பலன்களை அதிகம் தரும். 20.12.15 முதல் 07.02.2016 வரை அதிசாரமாக கன்னி ராசியில் குரு பிரவேசிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் சில துயரமான சம்பவங்கள் நடக்கலாம், வழக்கு தொல்லைகள், கடன் தொல்லையில் மாட்டி அவஸ்தைப்படுதல் போன்றவை சிலருக்கு இருக்கலாம். கவனம் தேவை. ஜீவனம், உத்தியோகம் போன்றவற்றில் சிக்கல்கள் உண்டாகலாம். சிலருக்கு வேலையும் போகலாம். தொழில் செய்வோருக்கு நஷ்டம் ஏற்படலாம். ஆனால் குருவின் பார்வையால் சில கஷ்டங்கள் தீரும். வக்ரகதியில் சிம்மத்துக்கு ஜனவரி 9 முதல் பிரவேசிக்கும் காலகட்டம் ஓரளவு பெருமூச்சு விடுவதாயும், வக்ர நிவர்த்தி ஆகி ஆகஸ்டு 3 வரை நல்ல நிலை தோன்றி எடுத்த காரியங்களில் முன்னேற்றம், சிலருக்கு புதுவீடு புகும் யோகம், பொருளாதார முன்னேற்றம் ஆகியவை உண்டாகலாம். சனியின் வக்ர பிரவேச காலம், ராகு குருவுடன் சேர்ந்திருக்கும் காலம் ஆகியவை கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடும் காலமாய் அமையும்.


ரிஷபம்
(கார்த்திகை 2,3,4, ரோஹிணி, மிருகசீரிடம் 1,2 பாதங்கள் முடிய)


இதுவரை 3ல் இருந்து அப்படி ஒன்றும் பலன் தரவில்லை என்ற நிலையில் இருக்கும் குரு 4க்குப் பெயர்கிறார். இதுவாவது நன்றாக இருக்கிறதா என்றால் சுமார் தான். ஆனால் குரு பார்வை படும் 10ம் இடம் ஓரளவு நல்ல சூழலைக் கொண்டுவரும். கண்டச் சனி பார்வை 4ம் இடத்து குருவுக்கு இருப்பதால் குடும்பத்தில் ஒரு குதூகலம் உண்டாகும். அதே நேரம் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும். சிலருக்கு கடன் தொல்லையால் அவஸ்தையும் உண்டாகும். கவனம் தேவை.
நல்ல காலம் வராதா என்று ஏங்கும்போது 20.12.15 முதல் 07.02.2016 வரை அதிசாரமாக கன்யாவில் குரு பிரவேசிக்கிறார். ‘வந்தாச்சுப்பா நல்ல காலம்’ என்று அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிக மகிழ்ச்சி உண்டாகும் காலம் இது. வீடு கட்டும், வாங்கும் யோசனை இருந்தால் அது நிறைவேறும். குருவுக்கு 3ல் இருக்கும் சனி ஓரளவு ஒத்துழைப்பும் தரும். கேதுவின் பார்வையும் பலனைத் தரும். திரும்ப வக்ரமாய் சிம்மத்துக்குப் பெயர்ந்து வக்ரகதி காலம் முடிய பரவாயில்லை எனப் பெருமூச்சு விடலாம். அடுத்த ஆகஸ்டுக்குப் பிறகே மறுபடியும் நல்ல நிலை தோன்றும்.
கிரஹங்கள் நன்மை தரும் நிலையில் இருப்பதாலும் இன்னும் கொஞ்சம் நன்மை உண்டாக வாய்ப்பு உள்ளது.


மிதுனம்
(மிருகசீரிடம் 3,4, திரு வாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் முடிய)


இதுவரை 2ல் இருந்து பொருளாதார முன்னேற்றம், உத்தியோகம், தொழிலில் முன்னேற்றம், குடும்பத்தில் ஒற்றுமை என்று கொடுத்துக் கொண்டிருந்த குரு 3ம் இடத்தில் இனி பிரவேசிக்கிறார். இது கொஞ்சம் பலம் குறைவுதான்; ஆனால் பார்வை 7, 9, 11ம் இடத்துக்கு இருப்பதால் வருகின்ற கஷ்டங்களைச் சமாளித்து விடுவீர்கள். அரசாங்க உதவி அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலையில் இருப்போருக்குக் கொஞ்சம் துன்பம் ஏற்படும். வக்ர சனியும் துலாத்துக்குச் சென்று கொஞ்சம் சிரமத்தைத் தருகிறார். இருந்தாலும் மனோதிடம் அதிகம். அதனால் உங்களுக்கு வரும் துயரங்கள் தூசாய்ப் பறந்துவிடும்.
குரு அதிசாரமாய் கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகும் நேரம் குடும்பத்தில் குதூகலம், பொருளாதார முன்னேற்றம், உடன் இருக்கும் ராகுவால் நன்மை என ரொம்பவே நல்லதாய் நடக்கும். வியாதிகள் இருந்தால் உடன் சரியாகும். இந்தக் காலகட்டத்தில் உங்கள் தேவைகளை விரைந்து முடித்துக் கொள்ளுங்கள்.
குரு மீண்டும் வக்ரமாய் சிம்மத்துக்குத் திரும்பி வக்ர நிவர்த்தி ஆகும் வரை ஓரளவு நல்ல பலன் ஏற்படும். சிலருக்கு இடமாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படும். ஜனவரியில் வரும் ராகு பெயர்ச்சி மிகுந்த நற்பலனை அள்ளித்தரும். குருவுடன் சேர்ந்து சுப நிகழ்வுகளை உண்டாக்கி ஒரு மகிழ்ச்சியைத் தரும். நோய்கள் அகலும். சிலருக்கு புத்திரபாக்கியம், தொழில் முன்னேற்றம் உண்டாகும்.


கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய)


ஜென்ம குரு வனவாசம் என்பார்கள். அதுபோல இதுவரை கஷ்டங்களையும், அசுப பலனாகவும் தந்து கொண்டிருந்த குரு உங்கள் வாக்கு ஸ்தானத்துக்கு மாறி உற்சாகப்படுத்துகிறார்.பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம், உத்தியோகம் சம்பந்தப்பட்ட துறைகளில் பூரண வெற்றியைக் காணலாம். திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்குத் திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் சிலருக்கு உண்டாகும். குடும்பத்தில் அனைவரும் நோய் நொடியின்றி இருப்பர். மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்தி நல்ல பெயரைப் பெறுவார்கள். அரசாங்கத்தின் தயவை, காரியங்களை எதிர்பார்த்து இருப்பவர்களுக்குச் சாதகமாய் அமையும்.
குருவின் அதிசார வக்ரமாய் கன்னி ராசிக்குப் போகும் 20.12.15 முதல் 09.02.16 வரையிலான கால கட்டங்களில் சில சங்கடங்கள் வரலாம். இந்த நேரத்தில் ராகுவின் பெயர்ச்சி வேறு தொந்தரவு தரும். ஆனால் கேது நன்மை தருவதாய் அமைவதால் ஓரளவுக்கு நிம்மதி கிட்டும். சனி மறுபடியும் விருச்சிகத்துக்கு மாறி பெருமூச்சு விடும்படி செய்கிறார். இந்தக் காலகட்டம் கலந்துகட்டி நன்மையும் தீமையும் வருகிறது. இருந்தாலும் மனோதிடம் சமாளித்துவிட செய்யும். மீண்டும் வக்கிரமாய் இரண்டாம் இடத்துக்குப் போகும் குரு கடைசிவரை நன்மை தருகிறார். இதில் அரசியல்வாதிகளும் பெண்களும் கொஞ்சம் சிரமத்தை அனுபவிப்பர்.


சிம்மம்
(மகம், பூரம் , உத்திரம் 1ம் பாதம் முடிய)


இதுவரை விரயத்தில் இருந்து பார்வையால் மட்டும் நன்மை செய்த குரு இனி ஜென்மத்துக்கு வருகிறார். இதுவும் அப்படி ஒன்றும் முன்னேற்றத்தைத் தராது; எனினும் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விடலாம். சனியின் வக்ர சாரம் செப்டெம்பர் 15 வரை மிகுந்த நல்ல பலன்களை உண்டாக்கும். குருவின் பார்வை ராசிக்கு 5, 7, 9 பாவங்களில் படுவதால் வழக்கிலிருந்து விடுதலை, செயல்களில் வெற்றி உண்டாகும். கௌரவ பாதிப்பு இருந்தாலும், எதிர்பாராத நன்மை உண்டாகும். நண்பர்கள், வெளி மனிதர்களிடம் கவனம் தேவை. வார்த்தைகளை விடும்போதும் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் இருக்கும் ராகுவால் தொல்லை ஏற்படலாம்.
எப்போது இந்தக் கஷ்டத்திலிருந்து விடுதலை என்றால், குரு அதிசாரமாய் கன்னி ராசிக்குச் செல்லும் 20.12.15 முதல் 07.02.16 கால கட்டத்தில் வெற்றிமேல் வெற்றியாக வரும். எல்லா விஷயங்களிலும், குறிப்பாகப் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். இன்னும் நிறைய சந்தோஷங்கள் உண்டாகும்.
மீண்டும் வக்ரமாய் ராசியில் பிரவேசிக்கும்போது ஓரளவு நன்மை தரும். சனியின் மாறுதல் மற்றும் ராகு, கேது பெயர்ச்சி ஆகியவை மறுபடியும் கஷ்டத்தைக் கொடுக்கும். தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் ஓரளவு நன்மை நடக்கும்.


கன்னி
(உத்திரம் 2,3,4, ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள் முடிய)


உங்களுக்கு இதுவரை லாபத்தில் இருந்து அதிக நன்மை செய்த குரு, இப்போது விரயத்துக்கு வருகிறார். இதில் சில சுப விரயங்களும் உண்டாகும். ஸ்தல யாத்திரை, இறைவழிபாடு என மனம் செல்லும். குடும்பத்தில் மருத்துவச் செலவையும் உண்டாக்கும். குருவின் பார்வை ஓரளவு நன்மை தந்தாலும் சனி வாக்கில் வந்து துன்பத்தைச் செய்துவிட்டு போகும். ஜென்மத்தில் இருக்கும் ராகுவும் சில கஷ்டங்களைத் தரும். குருவுடன் சேரும் சூரியன், செவ்வாய் மற்றும் புதன் அந்தக் கால கட்டங்களில் ஓரளவு நன்மை தருவதாக இருக்கிறது.
அதிசாரமாய் ஜென்ம ராசிக்கு குரு வரும் கால கட்டம் சில அசுப பலன்களைத் தருகிறது. ஆனாலும் குருவின் பார்வை நற்பலனைத் தரும் என நம்பலாம். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. இந்தக் கால கட்டத்தில் மனத்தை உறுதியாக வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தால் குருவினால் வரும் அசுப பலன்கள் பாதிப்பைத் தராது.
மீண்டும் வக்கிரமாக விரயத்தில் வரும் குருவால் ஓரளவே நன்மை உண்டாகும். அடுத்த ஒன்றரை ஆண்டுகள் குரு பார்வையின் பலன் மட்டுமே முழுமையாய் கிடைக்கும். மற்ற கிரஹங்களின் தன்மையும் தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள கிரக நிலைமையையும் கவனத்தில் கொண்டே பாதிப்புகள் குறைவாக இருக்குமா என்பதை அறிந்துகொள்ள முடியும். உங்களது தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் இது அதிகரிக்கும். குறிப்பாக, அரசியல்வாதிகள், பத்திரிகைத் தொழிலில் இருப்பவர்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆகியோர் தங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைக் கொண்டு குருபலன்களை அறிந்து கொள்வது நலம்.


துலாம்
(சித்திரை 1,2, ஸ்வாதி, விசாகம் 3 பாதம் முடிய)


குடும்பத்தைக் காப்பவராயும் தன்னுடைய நிலையிலிருந்து மாறாதவராயும் இருக்கும் நீங்கள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள். இதுவரை 10ல் இருந்து அனைத்து காரியங்களிலும் விக்னத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த குரு லாபத்துக்கு வருகிறார். இது உங்களை உயர்த்திக் கொள்ளும் நேரம் ஆகும். சனி ஜென்மத்தில் வந்தாலும் கவலை வேண்டாம்; குருவின் பார்வை அதைச் சரி செய்யும். பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ் தர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும். தொழில் முனைவோர் முன்னேற்றம் காண்பர். அரசியல் வாதிகளுக்கு அந்தஸ்து உயரும்; பெயர் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவர். பெண்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மொத்தத்தில் அனைத்து பிரிவினருக்கும் நல்ல சூழல் ஏற்படும்.
குரு அதிசாரமாய் உங்கள் ராசிக்கு 12ம் இடத்துக்குச் செல்வதைப் பற்றிக் கவலை வேண்டாம். அது சுப விரயமாகவும், ஸ்தல யாத்திரை செல்வதாகவும் அமைந்துவிடும். பரவாயில்லை, குரு சிரமம் தரவில்லை என்ற நிம்மதி வரும். இந்தக் காலகட்டத்தில் சனி மீண்டும் 2ம் இடத்துக்குச் போய் ஓரளவு நன்மை செய்கிறார்.
ஜனவரி 16 அன்று வக்கிரமாய் திரும்ப லாபஸ்தானத்துக்கு போகும் குருவுடன் ராகுவும் சேர்கிறார். இது மேலும் பலத்தைத் தரும். ராகுவால் வெளிநாட்டுத் தொடர்புகள், வெளி மனிதர்கள் தொடர்புகள் நன்மை தருவதாய் அமைகிறது.
பொதுவாக இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு அதிக நன்மை தருகிறது. உற்சாகமாக இருங்கள்.


விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய)
 

பாக்கியத்தில் இருந்த குரு பத்துக்குச் செல்கிறார். இது தொழில் அல்லது உத்தியோகத்துறைக்குச் சில மாற்றங்களை ஏற்படுத்தும். சில சமயம் கௌரவ பாதிப்பையும் தரும். சனி வேறு வக்ரமாய் விரயத்துக்குப் போவது மேலும் துன்பத்தை அதிகரிக்கும். இருந்தாலும், அதற்கு குருவின் பார்வை இருப்பது சிரமத்தைக் குறைக்க உதவும். வாக்குக் கொடுப்பதைக் கவனத்துடன் செய்யவும். ராகுவால் நன்மை இருந்தாலும், குரு அதைக் குறைக்கும் நிலையில் உள்ளது. கொஞ்சம் சிக்கல் விழுந்த நூல்கண்டை பிரிப்பது போல வாழ்க்கை இருக்கும். முருக நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருங்கள். பெண்களும், சுயதொழில் செய்பவர்களும் கொஞ்சம் உஷாராக இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
அதிசாரமாய் கன்னி ராசிக்குக் குரு பெயர்வதும் பின் வக்ரமாய் சிம்மத்துக்கு வரும் கால கட்டங்களும் ஓரளவு நன்மை தருவதாக இருக்கும். இழந்த பதவி திரும்பக் கிடைக்கும். புதிய பூமி, வீடு, வாகன யோகங்களும் இந்தக் காலகட்டத்தில் உண்டாகும்.
பொதுவாக, வக்ரம் நிவர்த்தியாகும்போது சுமாராகவும் அடுத்த ராசிக்கு பெயர்ந்தவுடன் நன்மை கள் அதிகம் கிடைப்பதாகவும் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு அமைகிறது. இஷ்ட தெய்வத்தை வணங்கி வந்தால் குரு பெயர்ச்சியால் விளையும் சிரமத்தை ஓரளவு குறைக்கும்.


தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் முடிய)


உங்களுக்கு இதுவரை அட்ட மத்தில் படுத்திக் கொண்டிருந்த குரு 9ஆம் இடத்துக்குப் பெயர்கிறார். இது ஒரு நல்ல ஸ்தானம். சகலபாக்கியங்களும் சித்திக்கும். குரு சிம்மத்தில் இருக்கும் ஒரு வருடமும் உங்களுக்குத் துன்பம் நேராது. புத்திரன் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வியாபாரம், செய்தொழில், உத்தியோகம் போன்ற ஜீவன வகையில் உயர்வு ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு ஒரு ஏற்றமான காலம் இது. வெளித்தொடர்புகள் மிகுந்த நன்மை தரும். இதுவரை இருந்துவந்த அனைத்துச் சிக்கல்களும் அகன்றுவிடும்.
அதிசாரமாய் உங்கள் ராசியிலிருந்து 10ஆம் இடமான கன்னி ராசிக்குக் குரு செல்லும்போது உத்தியோகம் மற்றும் தொழிலில் மாற்றம் வரும். அடிக்கடி பிரயாணம் செய்ய நேரலாம். வாயு, பித்தம் சம்பந்தமான வியாதிகள் தோன்றும். அனைத்துக் காரியங்களிலும் கொஞ்சம் சிரமம் ஏற்படும்.
மீண்டும் வக்ரமாய் 9ஆம் இடத்துக்கு குரு வரும்போது ஓரளவு நன்மையும் வக்ர நிவர்த்தி யாகும்போது மேலும் நன்மையும் நடக்கும். சனியாலும் ராகுவாலும் அதிக நன்மை என்று சொல்ல முடியாது. ஆனாலும், கெடுதல் இருக்காது என்பது உறுதி.

 மகரம்
(உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் முடிய)


இதுவரை 7ல் இருந்து நன்மை செய்துவந்த குரு அஷ்டம ஸ்தானத்துக்குப் போவது அனைத்து காரியங்களிலும் தடையை ஏற்படுத்தும். உத்தியோகம், செய்தொழில் இவற்றில் நஷ்டத்தைக் கொண்டுவரும், கைக்கு எட்டக்கூடியது வாய்க்கு எட்டாமல் போகும் வாய்ப்பு அதிகம். அதே நேரம் பார்வை பலத்தைத் தரும். மேலும் ராசியாதிபதி சனி வக்ரமாய் துலாத்தில் சஞ்சரிக்கும் நேரம் ஓரளவு நன்மை தரும்.
அதிசாரமாய் கன்னி ராசிக்குப் பெயரும் குரு 20.12.15 முதல் 7.2.16 வரையிலான காலகட்டம் சிறந்த காலம். இந்த நேரத்தில் எல்லாம் வெற்றியைத் தரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். இது வரை இருந்துவந்த கஷ்டங்கள் மாறி நல்ல சூழல் உண்டாகும். சனி வக்ர சஞ்சாரம், ராகு பெயர்ச்சி நன்மை தருவதாய் அமைகிறது. இந்த நேரங்களில் உங்கள் முயற்சிகளைத் தொடங்கலாம். அதில் வெற்றி உண்டாவது நிச்சயம்.
வக்கிரமாய் திரும்ப 8ம் இடத்துக்கு வரும் காலம் வக்ர நிவர்த்திவரை ஓரளவு நன்மை தரும். அதன் பின் சுமாரான நிலை உண்டாகும்.
தொழிலாளர்கள், மாணவர்கள், அரசியல்வாதிகள் கொஞ்சம் கவனமாய் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். கோவிலுக்கு அடிக்கடி செல்லுங்கள். தெய்வ வழிபாடு நன்மை செய்யும்.


கும்பம்
(அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் முடிய)


வாசனைத் திரவியங்கள், ஆடம்பரப் பொருட்கள் மீது ஆசையும் வாழ்விலே ஏற்ற இறக்கங்களையும் சந்தித்துக் கொண்டிருப்பதுமான நிலையில் உள்ள உங்களுக்கு இதுவரை 6ல் அமர்ந்து சில கஷ்டங்களைத் தந்து கொண்டிருந்த குரு 7ம் இடத்துக்குப் பெயர்கிறார். மனைவி, கணவர் மூலம் அதிக மகிழ்ச்சி உண்டாகும். தொழில் கூட்டாளியால் அதிக அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்களில் ஈடுபடுவது, பொருள் வரவு, புத்திர பாக்கியம், திருமணத் தடை நீங்குதல் போன்றவை உண்டாகும் நேரம் இது. மனம் கொண்டவரின் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். கடந்த கால கசப்புகள் மாறி, புதிய உத்வேகம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்கள், பத்திரிகையாளர்களுக்கு இது ஒரு நல்ல காலம். பதவி, புகழ் சேரும். உத்தியோகஸ்தர்கள் இதுவரை இருந்துவந்த தடை நீங்கி புத்துணர்ச்சி பெறுவர்.
குரு அதிசாரமாய் அஷ்டம ஸ்தானத்தில் கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகும் காலகட்டங்கள் கொஞ்சம் இறக்கம், தொய்வு ஏற்படும். உடல், மனரீதியான கஷ்டங்கள் வரலாம். குடும்பத்தில் குதூகலம் குறையலாம். இருந்தாலும் குருவின் பார்வை பலம் தரும். ராசியாதிபதி சனியின் வக்ர சஞ்சாரம் இதைச் சரி செய்யும். ராகுவின் பெயர்ச்சியும் ஓரளவு கெடுபலனைக் குறைக்கும். வக்கிரமாகத் திரும்ப 7ம் இடத்துக்கு வரும் குரு அடுத்த ராசிக்குச் செல்லும்வரை அதிக நல்ல பலன்களைத் தருவார்.


மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

 

நன்றாகச் சென்றுகொண்டிருந்த உங்கள் வாழ்க்கை இனி கொஞ்சம் சிரம தசையில் போகும். குரு இதுவரை 5ல் இருந்து நற்பலன் தந்தார். அது 6க்குப் போவதால் பொருளாதாரம் பாதிக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் தடை வரலாம். உறவினரே பகையாவார். கடன், வழக்கு பாதிப்பைத் தரும். இருந்தாலும் குருவின் பார்வை ஓரளவு நலம் தரும். ஜீவன வகையில் பலவித இடையூறு வரலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரி, உடன் பணிபுரிவோரால் தொல்லைக்கு ஆளாகலாம். தொழில் செய்வோர் கீழ் வேலை செய்வோரால் நஷ்டம் அடையலாம். பெண்கள் அவமானப்பட நேரலாம். சனி வேறு வக்ரமாய் அஷ்டமத்தில். கிரஹ வலிமை, தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து இது கூடவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.
அதிசாரமாய் கன்னிராசிக்கு குரு பெயரும் காலகட்டம் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விடலாம். மனைவி, கணவர் மூலம் ஆதாயம் உண்டாகும். இந்தக் காலகட்டத்தில் குருவோடு சேர்ந்த ராகுவும் ஓரளவு நன்மை செய்யும். சனியால் கெடுதல் வந்தாலும் குரு காப்பாற்றுவார்.
திரும்ப வக்ரமாய் 6மிடத்துக்குச் செல்லும் குரு வக்ர நிவர்த்தி ஆகும் வரை கொஞ்சம் சிரமங்களைக் குறைப்பார். வக்கிர நிவர்த்தி முதல் அடுத்த ராசிக்கு போகும் வரை சங்கடங்களைச் செய்வார்.
உங்கள் இஷ்ட தெய்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் நன்மை உண்டு. தனிப்பட்ட ஜாதகம் குரு, சனி, ராகு நன்றாக இருந்தால் மேற்படி சிரம பலன்கள் குறையும்.

-

Tuesday, July 7, 2015


அதி சூட்சும முருக மந்திரம்

ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்
சண்முகன் ரீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக

கந்தர் ஷஷ்டிக் கவசத்துப் பாடலின் இவ்வரிகளை உண்மையான பக்தியோடு தொடர்ந்து பாடினால் முருகனின் அருட் காட்சி கிட்டும்.

...

வரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம்

ஓம் நமோ பகவதே
சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

(இதை அனுதினமும் முருகன் திருவுருமுன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரஹிக்கப்படும் மந்திரமாகும். இதை யந்திரத்தில் ஸ்தாபன செய்து 48 நாட்கள் பூஜித்தால் முருகன் காட்சி கிட்டும் என ‘மாலா மந்த்ரம்’ என்னும் பழங்காலத்து நூல் தெரிவிக்கிறது)

...

முருகப் பெருமானது சடாச்சர மந்திரம்

"ஓம் ஐம்கிரிம் தோத் தஸ் ஸ்வாகா"

இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை உருப் போட்டால் நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.இது அனுபவ உண்மை!
தவிர,கந்தரனுபூதியில் உள்ள 15-வது பாடலாகிய “முருகன் குமரன் குகன் என்று மொழிந்து” என்று துவங்கும் பாடலை ஒருநாளுக்கு 108 முறை வீதம் ஜபித்து, 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வந்தாலும் நினைவாற்றல் பெருகும்
.
அகத்தீசர் 

அகத்தீசர் அவர்கள் அரும்பெரும் தவம் செய்தவர். அவரை காலையில் பத்து நிமிடம், "ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி" என்றும், மாலையில் அதேபோல் பத்து நிமிடம் நாமசெபம் செய்து வந்தால் அவர் பெற்ற பெரும் அருளை நமக்கு வழங்குவார்.

அவருடைய பாடல்கள் அத்தனையும் சாதாரண கல்வி கற்றவரும், எளிதில் படிக்கக்கூடிய முறையில் மிக ஆழமான கருத்துக்களை எளிய முறையில் பாடியுள்ளார். ஞானம் என்பதை உணரமுடியுமேயன்றி இன்னதென்று சொல்லமுடியாதது ஆகும். அது சாகாக்கல்வி ஆதலால் உடனேயே எடுத்தவெடுப்பில் அறியமுடியாதவொரு இரகசியம் ஆகும்.

நாம் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வேதங்களையும் மற்றும் நூல்களையும் படித்தபோதிலும் அதிலுள்ள நுட்பங்கள் நமக்கு புரியாது. ஆனால் "ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி" என்று நாம ஜெபம் செய்தால் எல்லா நூல்களையும் படித்து அறிய முடியாத ஞான இரகசியங்களை நாமே அறிந்து உய்ய முடியும்.

...

அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்
அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான்
அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு
அவர்மனது அவரைப்போல் பெரியார் உண்டோ.

- மகான் காகபுஜண்டர்

...

அகத்தீசா என்றால் அனைத்தும் பெறலாம்

அன்பு பொருந்திய வாழ்விற்கு அகத்தீசா என்று கூறுங்கள்.
ஆக்கம் பெற்று வாழ அகத்தீசா என்று கூறுங்கள்.
இல்லறம் சிறக்க அகத்தீசா என்று கூறுங்கள்.
ஈகை குணம் பெற அகத்தீசா என்று கூறுங்கள்.
உண்மைப் பொருள் அறிய அகத்தீசா என்று கூறுங்கள்.
ஊக்கம் பெற அகத்தீசா என்று கூறுங்கள்.
எண்ணம் சித்திக்க அகத்தீசா என்று கூறுங்கள்.
ஏற்றம் பெற்றிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஐயம் நீங்கிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஒண்பொருள் பெற்றிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஓங்காரம் கண்டிட அகத்தீசா என்று கூறுங்கள்.
ஔடதம் அறிந்திட அகத்தீசா என்று கூறுங்கள்.

ஓம் அகத்தீசாய நம!ஓம் அகத்தீசாய நம!ஓம் அகத்தீசாய நம!

ஓம் சிவாய அகத்தீசாய நம:

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி.

...

குருவணக்கம்

குருவழியே ஆதி ஆதி
குருமொழியே வேதம் வேதம்
குருவிழியே தீபம் தீபம்
குருபதமே காப்பு காப்பு.

குருவடி சரணம், திருவடி சரணம். குருவருளே திருவருள்.

உணவு

...

உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ...

அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும், ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும்.

உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.

உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.

சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.

உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.

சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.

நின்று கொண்டு சாப்பிக் கூடாது.

அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.

இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.

ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.

உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.

அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.

தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும்.

இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள். பால்சோறு சாப்பிடலாம்.

நெய்யில் அடியில் தங்கியிருக்கும் கசடைப் பயன்படுத்தக் கூடாது. வெண்ணெயில் உள்ள அழுக்குகளின் திரட்சி இது. எளிதில் ஜீரணமாகாது. இதை உட்கொண்டால் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, கல்லீரல் மந்தம் உள்ளவர்களுக்குக் காமாலை நோய் ஆகியவை ஏற்படும். எனவே இதைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.

வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.

ோறு, நெய், உப்பு ஆகியவற்றை கையால் எடுக்கக்கூடாது. கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும்.


மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.

உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.

வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.

இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.

புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.

வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும். மேற்கு நோக்கினால் பொருள் சேரும். தெற்கு நோக்கினால் புகழ் வளரும். வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும்.

உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்.

...

சில உணவுகளை உண்ணாமல் தவிர்க்க வேண்டும் என ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
அவை ..
கொல்லைப்புற வழியாகக் கொண்டு வந்த சோறு,
வரகு முதலான தான்யங்களினால் அமைந்தது,
வாயினின்று விழுந்த பொருளுடன் சம்பந்தமுடையது,
வாயில் போட்ட கவளத்தில் மீந்திருப்பது,
கெட்டவர்கள் கண்ணால் பார்த்த உணவு,
தீய்ந்து போனது,
துணி, தும்மல் ஆகியவை பட்டது,
நாய் முதலிய பிராணிகளால் முகர்ந்தது, உண்டது,
ஏகாதசி போன்ற உண்ணாநோன்பு விரதகாலத்தில் சமைத்தது ஆகிய உண்டிகள் தள்ளப்பட வேண்டியவை.

மேலும், பிராணிகள், மனிதர், முகர்ந்து பார்த்த உணவு, பிணியாளர்கள், ரோகமுடையவர்கள் ஸ்பர்சித்தது, விருப்பமில்லாமல் இன்முகமாக அளிக்கப்பட்டது, ஈ, புழு, நூல், முடி, நகம் போன்றவை விழுந்தது, ஸந்யாசிகள் கொடுத்தது, அவர்கள் பாத்திரத்திலிட்டது, மனிதர், எலி, கோழி, காக்கை, பூனை ஆகியன வாய்பட்ட உணவும் விலக்கப்பட வேண்டியவை.

வாயில்லா வாயிலினால் வந்தசோறும்,
வரகு முதலாகா தென்றுரைத்த சோறும்
வாயினின்றும் விழுமவைதான் பட்டசோறும்
வாய்க் கொண்ட கவளத்தின் மிகுந்த சோறும்,
தீயவர்கள் படுஞ்சோறும் தீதற் சோறும்
சீரையுரை தும்மலிவை பட்டசோறும்
நாய் முதலானவை பார்க்குந் தீண்டும்சோறு
நாள் தூய்தல்லாச் சோறும் நண்ணாச் சோறே.

...

உணவு, ஒரு மனிதனுக்கு இன்றி அமையாதது. உடலுள் தங்கும் உயிரை அது தங்க வேண்டிய வரை உடலை பேணி காக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் கூட நாம் எத்தனை கவனமாக இருந்தால், அந்த இருப்பே நம்மை பல நிலைகளை கடக்க உதவி புரியும் என்று ஆணித்தரமாக கூறுகின்றனர். சித்தர்களில் அகத்தியர், உணவை மருந்தாக பாவித்து மருத்துவ முறையை நடை முறை படுத்தினார். இனி, உண்ணும் முறையில் நாம் என்னென்ன விதிகளை கடைபிடிக்கவேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

அசைவம் அல்லது புலால் என்கிற உணவு முறையை அனைவரும் ஒதுக்க வேண்டும் என்கின்றனர். அசைவம் உண்பவருக்கு தாது சுத்தி உண்டாகாது என்கின்றனர் சித்தர்கள், அதனால் அவர்களால் ஆன்மீகத்திலோ, சித்த முறைகளிலோ மேல் படிக்கு உயரமுடியாது என்று திண்ணமாக கூறுகிறார். யோசிக்கவும்.அசைவம் உண்டவர், சமைப்பவர் கையிலிருந்து எதை வாங்கி சாப்பிட்டாலும், அவரிடம் உள்ள தோஷம் உண்பவருக்கும் வரும்.எந்த தெய்வமும் ஒரு உயிரை பலி கொடு என்று கேட்பதில்லை. பெரியவர்கள் அறுக்க சொன்னது ஒன்று, நம்மவர் அறுப்பது வேறொன்று. இதற்கும் மேல் ஒருபடி சென்று "கொன்றால் பாபம் தின்றால் தீரும்" என்று ஒரு மொழியை சொல்லி, கொன்றதை தானும், தன்னுடன் இருப்பவர்களுடன் பகிர்ந்து உண்பது என்பது, "பிரம்ம ஹத்தி" தோஷத்தை தானும் ஏற்றுக்கொண்டு, பிறரையும் சுமக்க வைப்பது போன்றது.

உண்ண அமர்ந்த உடன், இறைவனை த்யானித்து "நீயே என்னுள் இருந்து இந்த உணவை உனக்கு சமர்ப்பணம் செய்ததாக ஏற்றுக்கொள். இந்த உணவு நல்ல சக்தியை, நல்ல எண்ணங்களை எனக்குள் தரட்டும். உண்பது இவ்வுடலாயினும் இதன் தாத்பர்யம் உன்னை வந்து அடையட்டும்" என்று வேண்டிக் கொண்டு உண்ணவேண்டும்.

உணவை சமைப்பவர், சமைக்கும் போது சுத்தத்துடன், தூய எண்ணங்களுடன் இருக்க வேண்டும். அவரது தூய நிலையும், எண்ணமும் அந்த உணவு வழியாக அதை சாப்பிடுபவருக்குள் சென்று அவரது மன நிலையை சமன் செய்யும். இதற்காக, சமைப்பவர் தனக்கு தெரிந்த மந்திர உச்சாடனங்களை, மூல மந்திரங்களை மனதுள் சொல்லிக்கொண்டே சமைக்கலாம். ஒருவரது மன நிலையை உணவு நிறைய அளவுக்கு மாற்றி விடும் என்று உணர்ந்தே, நம் முன்னோர்கள் வீட்டை விட்டு வெளியே சாப்பிடுவதை தவிர்த்து வந்தார்கள். "ஆசாரம்" என்று இதை அழைத்தனர். இறைவனை சார்ந்தது நின்று விலக்க வேண்டியதை விலக்கி நிற்பது என்று பொருள். இது ஒரு வர்ணத்தாருக்கு மட்டும் அல்லாமல் எல்லோருக்கும் உரியது.

நல்ல எண்ணங்களுடன், அமைதியாக இருந்து, உண்ணும் உணவில் கவனம் வைத்து உண்ண வேண்டும்.
உண்ணும் உணவு வெளியே சிதறாமல் கவனமாக உண்ண வேண்டும். சிந்திய உணவை நீரினால் சுத்தம் செய்து பின்னர் உண்ணலாம்.

இறைத்யானத்துக்குப் பின், உண்ணும் முன் ஒரு பிடி உணவை வலது கையில் வைத்துக்கொண்டு, சித்தர்களையும், மகான்களையும் த்யானித்து "இது உங்களுக்கான அவிர்பாகம். இதை எந்த உயிர் சாப்பிட்டாலும், இதன் தாத்பர்யம் தங்களை வந்து சேரட்டும்" என வேண்டிக்கொண்டு, அருகில் யாரேனும் இருந்தால் அவர்களிடம் கொடுத்து வெளியே எங்கேனும் வைத்திட, அதை சாப்பிடுவது அணிலோ,, காகமோ எதுவோ ஆயினும், அந்த உணவின் தாத்பர்யம் என்பது பெரியவர்களை சென்று சேரும். இதுவும் ஒரு வகை குருபூசை.

உண்ணும் நேரத்தில் நீர் அருந்த வேண்டி வந்தால், இடது கையால் அருந்த வேண்டி வரும். அப்போது வலது கையை சாப்பிடும் தட்டில்/இலையில் வைத்துக் கொண்டு நீர் அருந்தலாம். விதி விலக்கு உண்டு. மற்ற நேரத்தில் வலது கையால் தான் நீர் அருந்தவேண்டும்.

உணவு அருந்தும் சூழ்நிலை சுத்தமாக, அசுத்தமாகாமல் இருக்க வேண்டும். உணவு அருந்துவதினால், நமக்குள் ஒரு யாகம் நடக்கிறது என்பதை உணரவேண்டும். அதை "கர்ம தகனம் என்பார்கள் பெரியவர்கள். ஆதலால், ஆத்மா அக்னி வேள்விக்கு என்று படைக்கப்பட்ட எதையும் (இலையில்/தட்டில் பரிமாறப்பட்ட) வீணாக்கக்கூடாது. உண்ண விரும்புவதை மட்டும் பரிமாற வேண்டுங்கள்.

பசுவுக்கு ஒரு பிடி புல்லோ, த்வாதசி திதி அன்று அகத்தி கீரையோ, ஒரு கை உணவோ கொடுப்பதினால், நிறைய தோஷங்களிலிருந்து விமோசனம் பெறலாம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து பசுவின் பசியை ஆற்றினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தும் "அரிசி"யின் மறுபெயர் "அரிசிவா" என்கின்றனர் சித்தர்கள். அது, நாராயணர், சிவபெருமானின் ரூபம். ஆதலால், அதனை மிகவும் மதிப்பவருக்கு அவர் அருள் சேரும். எந்த நேரத்திலும் அலட்ச்சியம் கூடாது.

சாப்பிட உட்கார்ந்தபின், உணவை உண்டு முடிக்கும் வரை எந்த காரணம் கொண்டும் எழுந்திருக்கக்கூடாது. அப்படி செய்வது, அன்ன த்வேஷம் என்கிற தோஷத்தை கொண்டு தரும். அன்ன த்வேஷம் ஒருவருக்கு வந்தால், நல்ல காலத்தில் எல்லாம் நிறைவாக இருக்க, ஒரு வாய் உணவு கூட சாப்பிட முடியாமல் போய்விடும்.

வெளிச்சம் இல்லாத பொது உணவு உண்ணக்கூடாது. சாப்பிடும் போது மின்சாரம் தடைபட்டு வெளிச்சம் போய்விட்டால், விளக்கேற்றி வைத்து அந்த வெளிச்சத்தில் சாப்பிட வேண்டும்.பூசை அறையிலோ, வீட்டிலோ விளக்கு எரிந்து கொண்டிருந்தால், யாரேனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் விளக்கை நிறுத்தக் கூடாது.

உண்ணும் உணவை ஒரு போதும் கைக்குள் உருட்டி உண்ணக்கூடாது. உருட்டி வைப்பது "பிண்டம்" எனப்படும். இது பித்ரு சடங்கில் உணவை வைக்கும் முறை. உருட்டி உண்டால் நமக்கு நாமே பிண்டம் போட்டுக்கொள்வது போல் ஆகிவிடும். அது அன்னத்தை அவமதிப்பதாகவும் ஆகிவிடும்.

பெண்கள் உணவை பரிமாறும் போது தலை முடியை முடிந்து கொணட பின்னர்தான் பரிமாற வேண்டும். தலை முடியை விரித்துப் போட்டுக்கொண்டு உணவு பரிமாறக் கூடாது. நெற்றியில் திலகமும் இருக்கவேண்டும்.

உணவு உண்ட பின் குளிக்கக் கூடாது. அப்படி தவிர்க்க முடியவில்லை என்றால், உண்டு ஒரு மணி நேரம் கழிந்து தான் குளிக்கவேண்டும். ஒருவர் உண்ட உணவு ஒரு மணி நேரத்துக்குள் ஜீரண நிலைக்கு சென்று விடும். கழிவுகள் அகற்றப்பட்டுவிடும். குளிப்பதினால் உடல் சூடு தணிக்கப்படுவதால், ஜீரணத்தை பாதிக்கும்.

ஒரு மணிநேரத்துக்கு பின் இரைப்பையில் தாங்கும் உணவு விஷமாக மாறி உடலை வருத்தும். அசைவ உணவு ஒரு மணி நேரத்துக்குள் ஜீரணிக்கப்படமாட்டா. ஆதலால், அசைவ உணவை உண்டு நமக்கு நாமே விஷம் ஏற்றிக் கொள்வதை தவிர்க்கவேண்டும். யோசிக்கவும்.

நவ கிரகங்கள் ஒருவரை, அவருக்கு எது மிக பிடிக்குமோ அந்த வழியில் தூண்டுதலை கொடுத்து, உள்ளே நுழைந்து தாங்கள் செய்ய வேண்டிய "வேலையை" செய்யும். அதில் ஒன்று உணவு.ஆதலால் எந்த குறிப்பிட்ட உணவின் மீதும் ஆசை/பற்றுதலை வைக்காமல் எது வந்து சேருகிறதோ அதை இறை சிந்தனையுடன் உண்பதினால், இவர்கள் பிடியிலிருந்து தப்பி விடலாம்.

உணவு தானம் எத்தனையோ தோஷங்களுக்கு சிறந்த பரிகாரம். ஒருவனுக்குள் நடக்கும் கர்ம யாகத்துக்கு உதவி புரிவதினால், நம் கர்மாவும் அதனுடன் கழிந்து போகும். அதனால் தான் கலியுகத்தில் "அன்னத்துக்கு" மிஞ்சின தர்மம் இங்கு இல்லை என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

பிறர் உண்ணும் இடத்தருகில் நின்று தும்முவது, துப்புவது போன்ற அசுத்தங்களை பிறர் செய்யக்கூடாது.

உண்ணும் உணவால் உடல் மேன்மை பெற பெரியவர்கள் அளவாக உண்ணச்சொன்னார்கள். எப்படி? உண்ணும் முன் சுத்தமான நீரால் காலை கழுவிவிட்டு அமர வேண்டும். காலில் உள்ள நீர் உலந்ததும் சாப்பிடுவதை நிறுத்திவிடவேண்டும். இது தேவைக்கு சாப்பிடுவதை தெரிந்துகொள்ள ஒரு அளவுகோல்.

மிளகு ஒரு நல்ல மருந்து. தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ள மறவாதீர்கள். இது எந்த விஷத்தையும் அறுத்துவிடும். பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்கிற மொழி இதன் மகத்துவத்தால் வந்தது.

ஜீரகம் செரிமானத்துக்கு மிகவே உதவிபுரியும். அசைவம் சாப்பிட்டவர்கள் உடல் சுத்தி பெற 48 நாட்களுக்கு சீரகத்தை தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து அருந்தி வந்தால் தாது சுத்தி ஏற்படும்.

உணவில் கடுகை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துக்கொள்ளுங்கள். இது மிக வீரியமான ஒன்று. பின்னர் ஏதேனும் வியாதிக்காக மருந்து சாப்பிட்டால் மருந்து வேலை செய்யாது.

வாரத்தில் ஒரு நாள் உப்பை தவிர்த்து (இரு வேளையேனும்) விரதமிருங்கள். வைத்தியச் சிலவை நிறைய அளவுக்கு தவிர்க்கலாம்.

கண் திருஷ்டி போக்கும் பைரவர் மூல மந்திரம் :

கண் திருஷ்டி  போக்கும் பைரவர் மூல மந்திரம் : மூல மந்திரம்   ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம்  ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம  இந்த மூ...