சளி தீர:
துளசி இலையை நன்றாக மென்று தின்று வர தீரும். வெள்ளை பூண்டை பாலில் வேக வைத்து குடித்திட சளி தீரும்.
பித்த வெடிப்பு:
விளக்கென்ணையை வெடிப்புகளில் தடவி வர பித்த வெடிப்பு குணமாகும்.
வயிற்று வலி:
வெந்தயத்தை மோரில் ஊர வைத்து சாப்பிட வயிற்று வலி தீரும்.
குடல்புண்:
மாதுளை பழம் அடிக்கடி சாப்பிட குடல்புண் குணமாகும்.
அஜீரணம்:
வெந்நீரில் சீரகம் கலந்து குதித்து வர அஜீரணம் தீரும்.
மூலம்:
கருணை கிழங்கு லேகியம் சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
No comments:
Post a Comment