Thursday, June 20, 2019

ஆன்மீக கதைகள்



ஒரு அதிரசம் எங்கே ?

சாது ஒருவர் வழியில புறா இறந்து கிடந்ததை பார்த்தார். அதை கையில் எடுத்து மெதுவாக தடவி கொடுத்தார். உடனே அதற்கு உயிர் கிடைத்து பறந்து சென்றது. இதை ஒரு சோம்பேறி பார்த்தான். இந்த சாதுவுடன் இருந்தால் நாம் எதற்காகவும் வேலை செய்ய வேண்டாம் என்று நினைத்தான். அதன் படி சாதுவிடம் தன்னை சிஷ்யனாக சேர்த்து கொள்ளுமாறு கேட்டான். அவரும் அதற்கு ஒப்பு கொண்டார். இருவரும் படகில் செல்ல தீர்மானித்தனர். சாது 4 அதிரசத்தை கொடுத்து தான் தியானம் செய்து விட்டு வருவதாக சொன்னார்.. அவர் திரும்பி வருவதற்குள் சோம்பேறி அதில் ஒன்றை சாப்பிட்டான்.. சாதுவும் திரும்பி வந்து அதிரசத்தில் ஒன்றை காணாது கேட்டார்.. அவனும் தனக்கு எதுவும் தெரியாதென்று சொன்னான்.. சாது அவன் தான் சாப்பிட்டு இருப்பான் என்று தெரிந்து கொண்டார். இருப்பினும் தெரியாதது போல் இருவரும் படகில் சென்றார்கள்.. சாது தன்னிடம் உள்ள காகிதத்தை கையில் வைத்து அதை ஒரு பறவையாக மாற்றினார்..  மனிதனும் " என்னது ஆச்சரியமா இருக்கே " என்றான்.. சாது " எனக்கு ஆச்சரியம், அதிரசம் காணாமல் போனது தான் " என்று சொன்னார்.. வழியில் சிறிது மணலை எடுத்து அதை 3 பங்காக பிரிக்க சொன்னார்... சிஷ்யனும் வெறுப்போடு 3 பங்காக பிரித்தான்.. சாது மணலை தங்கமாக மாற்றி '' இந்த 3 பங்கில் ஒன்று எனக்கு, மற்றொன்று உனக்கு, மூன்றாவது பங்கு அதிரசம் சாப்பிட்டவனுக்கு ' என்று சொன்னார். சோம்பேறியும் " நான் தான் அதிரசம் சாப்பிட்டேன், எனக்கு தான் இந்த தங்கம் சொந்தம் " என்று சொல்லிவிட்டு தங்க மணலை மூட்டையாக கட்டி எடுத்து கொண்டு ஒடினான்.. சாது நினைத்து கொண்டார் " சோம்பேறி மனிதன், உழைக்காமல் வேலை செய்ய வேண்டுமென்று நினைத்தான்..
எனது சக்தியால் தங்கம் மீண்டும் மணலாக மாறியது தெரியாமல் ஏமாந்து போனான்" என்றார்..

நீதி : உழைப்பவனுக்கு மட்டுமே செல்வம் கிட்டும் என்பது நிதர்சனமான உண்மை...
 

No comments:

Post a Comment

கண் திருஷ்டி போக்கும் பைரவர் மூல மந்திரம் :

கண் திருஷ்டி  போக்கும் பைரவர் மூல மந்திரம் : மூல மந்திரம்   ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம்  ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம  இந்த மூ...