Thursday, June 27, 2019

குமரகோட்டம் முருகன் கோவில் -காஞ்சிபுரம்

குமரகோட்டம் முருகன் கோவில் :

இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.இத்தலத்தின் நுழைவாயிலில் காட்சிதரும் விநாயகப் பெருமானின் பேர்ருவத்தை தரிசித்து ஆசிபெற்ற பின்பு ஆலயத்திற்குள் செல்கின்றனர். மூலவர் சுப்ரமண்ய சுவாமி ருத்ராட்ச மாலையுடனும், கையில் கமண்டலமும் கொண்டு தரிசனம் தருகிறார். இடப்புறமும், வலப்புறமும் வள்ளி, தெய்வானை தேவியர்கள் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். இவரது வலக்கரம் அபயமாகவும், இடக்கரம் ஊரு முத்திரையும் கொண்ட எழில் தோற்றத்துடன் உள்ளது.
பிரமனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் குட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி.

தலத்தின் தனி சிறப்பு:

நாகசுப்ரமண்யரின் திருமேனிக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் நின்றுள்ளதோடு, வள்ளி-தெய்வானை உலாத் திருமேனிகளுக்கு மூன்று தலை நாகம் குடை பிடிப்பது போலும் காட்சிதருகிறது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கும், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளதால் இது சோமசகந்தரை பூர்த்திசெய்வது போல் அமைந்துள்ளது.

அருணகிரிநாதர் முருகன் கோவிலுக்கு வழி தெரியாமல் நின்ற போது முருகனே சிறுவன் வடிவில் வந்து கோவிலுக்கு அழைத்து வந்து தரிசனம் தந்துள்ளார்.

Motivational Quotes in tamil part-2

1.இந்த உலகம் ஓடிக்கொண்டே இருக்கும். உன்னை வெற்றியை தடுக்கும் சக்தி எவனுக்கும் இல்லை.

2.ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள். -இங்கர்சால்

3.உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண். - சாக்ரடிஸ்

4.ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது! -அம்பேத்கர்

5.இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

6.எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

7.விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்- செ.கு.வாரா

8. மனிதன் நம்பிக்கையின்றி ஒரு நொடி வாழ்வது கூட வீண்.

9. உன்னை வெறுபவர்களுக்கு நீ கொடுக்கும் தண்டனை அவர்கள் கண் முன் வாழ்ந்து காட்டுவதே ஆகும்.

10. பிறப்பு இறப்பு மட்டுமே நம்மை தேடி வரும். மற்றதை நாம் தான் தேடி செல்ல வேண்டும்.

Motivational quotes of famous people in tamil - Part 1

1.அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது. - அரிஸ்டாட்டில். 


2.தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஒளவையார்

3.நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள். 

4.எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

5.தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம். -கென்னடி

6.கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன் – காந்திஜி

7.செல்வம் இருந்தால்,உன்னை உனக்குத் தெரியாது;செல்வம் இல்லாவிட்டால்,உன்னை யாருக்கும் தெரியாது -கதே

8.பணத்தின் மதிப்பு உனக்கு தெரிய வேண்டுமானால், எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார் -பெஞ்சமின் ப்ராங்க்ளின்.

9.சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

10.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

Wednesday, June 26, 2019

வரதராஜ பெருமாள் - அத்தி வரதர் காஞ்சிபுரம்




வரதராஜ பெருமாள் - ஸ்ரீ அத்தி வரதர் காஞ்சிபுரம்
திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள்
கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக  முக்கியத்துவம் வாய்ந்த தலம. இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில்  அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

மூலவர், வரதராஜர் (தேவராஜர்), தாயார், பெருந்தேவி. திருமங்கை மன்னனும், பூதத்தாழ்வாரும் பாடிய தலம்.பிரம்மாவின் யாக அக்னியில் கிடைத்த மூர்த்தி, இங்கு முகத்தில் தழும்புடன்
உற்சவராக இருக்கிறார். இதனால், இவருக்குப் படைக்கும் நைவேத்யத்தில்
மிளகாய் சேர்ப்பதில்லை. இவரே இங்கு பிரதானம் பெற்றவர் என்பதால்,
பக்தர்கள் இவரைத் தரிசித்து விட்டே மூலவரைத் தரிசிக்கிறார்கள.
பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர். அத்தி எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில்  பள்ளி கொண்டிருக்கிறார்.
பிரம்மா நிறுவிய அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசிக்கலாம். 1938, 1979 ஆம் ஆண்டுகளில் வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் 2019 ல் இத்தகைய தரிசனம் கிட்டும்!
முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும்.  அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.
சக்கரத்தாழ்வார் : திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என
பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும்
காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி
தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி  காட்சியளிக்கின்றார்.
தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால்
பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தீர்கின்றன.குழந்தை வரம்
வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஏறத்தாழ 3 கிலோமீட்டரில் அமைந்துள்ளது.



புதன் கிரக தோஷம் நீக்கும் ஸ்தலம் திருக்காலிமேடு

திருக்காலிமேடு:






See the source image













புதன் கிரக தோஷம் நீக்கும் ஸ்தலம் திருக்காலிமேடு. இந்த
 ஸ்தல்த்தின் இறைவன் சத்தியநாத சுவாமி. செம்மணலால் ஆன லிங்கம். அம்பிகை திருநாமம் பிரம்மராம்பிகை. இந்த கோவிலை இந்திரன் வந்து வணங்கி பெரும் பேரு பெற்றார். இந்த கோவிலில் இந்திர தீர்த்தம் உள்ளது.

சந்திரனிற்கும், குருவின் மனைவிக்கும் பிறந்தவர் புதன். இதனால் மனம் வருந்திய புதன் ஸ்தல்த்தின் இறைவன் சத்தியநாத சுவாமியை வணங்கி நவக்கிரகங்களில் ஒன்றாகும் பேறு பெற்றார். 

புதன் கிரக தோஷம் நீக்கும் ஸ்தலம்:

புதன்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, புதனுக்கு பச்சைத் துணி சாத்தி, பச்சைப் பயறு படைத்து வழிபட்டால் புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

 இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.

Tuesday, June 25, 2019

துர்கை காயத்ரி மந்திரம்.

துர்கை காயத்ரி மந்திரம்:

ஓம் காத்யாயனய வித்மஹே 
கன்யாகுமாரி தீமஹி 
தன்னோ துர்கி ப்ரசோதயாத்

durgaஇந்த மந்திரத்தை 108 முறை கூறி வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒழியும். தடைகள் நீங்கி காரிய வெற்றி கிடைக்கும்.

 செவ்வாய், வெள்ளி கிழமை, ராகு காலத்திலும் கூறலாம்.

செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் பொருளாதார கஷ்ட நிலையை அறவே நீக்கும். சுபிட்சங்கள் பெருகும்.

சக்தி வாய்ந்த ஸ்ரீ கால பைரவர் மஹா மந்திரம்

சக்தி வாய்ந்த ஸ்ரீ கால பைரவர் மஹா மந்திரம்:

kaala bairavarமஹா மந்திரம்:


ஓம் ஹ்ரீம் பும் பாதுகாய அபதூதாரணாய குரு குரு பாதுகாய ஹ்ரீம் ஓம் நமஹ ஷியாயே ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் க்ஷம் க்ஷேத்திரபாலாய கால பைரவாய நமஹ.

ஸ்ரீ கால பைரவரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 27 முறை கூறி வழிபட வேண்டும். இவரை வணங்கினால் நமக்கு ஏற்பட இருந்த தீவினைகள் நீங்கும். மனதிலிருந்த வீண் அச்சங்கள் ஒழியும். 

குறிப்பாக மரணத்தை குறித்த பயங்கள் நீங்கும். வறுமை ஏற்படாமல் காக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும்.




















அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோவில்




சித்ரகுப்தர்கோவில் 9 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. சித்ரகுப்தர் மனிதர்களின் நன்மை தீமைகளை கணக்கில் கொண்டு அவர்கள் இறந்த பிறகு அவர்களை சொற்ககடிற்கு அனுப்புவதா அல்லது நரகதிர்க்க என்பதை முடிவு செய்வார். 

இந்த கோவிலில் வலது கையில் எழுத்தானியுடன், இடது கையில் ஓலை சுவடியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். 


தல சிறப்பு: 



நவக்கிரகத்தில் கேதுவினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து இவரை வணங்கினால் விடுபடலாம். 


தமிழ்நாட்டில் சித்ரகுப்தருக்கு தனி கோவில் இருப்பது இங்கு மட்டும் தான். இங்கு சித்ரா பௌர்ணமி வெகு விமர்சயாக இங்கு கொண்டாடப்படும். 




Monday, June 24, 2019

காஞ்சிபுரம் கோவில்கள்:


 பாண்டவ தூத பெருமாள்:

பாண்டவ தூத பெருமாள் கோவில் பல்லவர்களால் 8 ஆம் நூற்றாண்டில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்காக கட்டப்பட்டது  .இந்த கோவில் புராதன கலை நயமிக்க கோவில். 

தல சிறப்பு:

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் 25 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பது தனி சிறப்பாகும்.

ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் இப்பெருமாளை வணங்கினால் அனைத்து துன்பங்களும் விலகும்.

கோவில் முகவரி:

பாண்டவ பெருமாள் கோவில் தெரு,பெரிய காஞ்சிபுரம்,தமிழ்நாடு

கோவில் திறக்கும் நேரம்:

காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை.
மாலை 4:௦௦ மணி முதல் 7.30 மணி வரை


தொடர்புக்கு:

9144-2723-1899.

Friday, June 21, 2019

இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க:


1.உங்களுக்கு புத்தகம் எழுதி வெளியிடனும்னு ஆசை இருந்தால்,அமேசான் நிறுவனம் இதற்க்கு ஒரு வழி சொல்றாங்க. அமேசான் நிறுவனத்தின் இலவச சேவையான கிண்டில் டைரக்ட் பப்ளிஸிங் ல நீங்க உங்களோட புத்தகத்த வெளியிடலாம். அவங்க உங்களுக்கு புத்தக விற்பனைல இருந்து ராயல்ட்டி பணம் கொடுப்பாங்க.

2.மொபைல் அப்ளிகேசன்:


ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற சாதனங்களுக்கு புது அப்ளிகேசன்கல உருவாக்கி நீங்க ஆன்லைன்ல விற்பனை செய்யலாம்.


3.பழைய பொருள் விற்பனை:


OLX, quickr.com,   .இன் இந்த இணையதளங்களில் வீட்ல இருக்க பழைய பொருள்கள விற்பனை செய்யலாம்.

4.கற்பித்தல் :


நீங்கள் எதாவது ஒரு பாடத்தில் திறமையானவர்களாக இருந்தால் உங்களுக்கு கற்பிக்கும் அனுபவம் இருந்தால், www.tutorvista.com இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் பாடம் நடத்தலாம்.


5.ஆன்லைன் ஒர்க் :


www.elance.com இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் வேலை செய்து பணம் பெறலாம். இதில் நீங்கள் உங்கள் திறமையை நிரூபிப்பதின் மூலம் நிறைய பணம் மற்றும் வாடிக்கையாளர்களை பெறலாம்.

பயனுள்ள வீட்டு குறிப்புகள்:

வீட்டு குறிப்புகள்:

1.  வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

2. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

3. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

4. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.

5. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.


அழகு குறிப்புகள் - Part 2

முகம் சுருக்கம் நீங்க :

1. ஐஸ் கட்டி மசாஜ்:
இந்த முகம் சுருக்கம் நீங்க ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும் 10 நிமிடம் மசாஜ் செய்தால், சரும செல்கள் குளிர்ச்சியடைவதோடு, முகத்தில் தோன்றும் மேடு பள்ளங்கள் மற்றும் முகம் சுருக்கம் நீங்க ஆரம்பிக்கும்.

2. தயிர் மசாஜ்:
தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் மற்றும் லாக்டிக் அமிலம், சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.அதற்கு தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்

3. வெள்ளரிக்காய்:
வெள்ளரிக்காயை சாப்பிடுவதுடன், அதன் சாற்றினை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, சருமத் துளைகள் சுருங்க ஆரம்பிக்கும்.

4.எலுமிச்சை மற்றும் சர்க்கரை:
உங்கள் முகத்தில் மேடு பள்ளங்களுடன், கரும்புள்ளிகளும் இருந்தால், எலுமிச்சை சாற்றில் சர்க்கரை சேர்த்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து, கழுவ வேண்டும்.

5.பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடா ஒரு பௌலில் சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் உலர வைத்து பின் கழுவ வேண்டும்.இதனால் சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத் துளைகளும் சுருங்கும்.


Thursday, June 20, 2019

மருத்துவ குறிப்புகள்- Part 1


சளி தீர:

துளசி இலையை நன்றாக மென்று தின்று வர தீரும். வெள்ளை பூண்டை பாலில் வேக வைத்து குடித்திட சளி தீரும்.

பித்த வெடிப்பு:

விளக்கென்ணையை வெடிப்புகளில் தடவி வர பித்த வெடிப்பு குணமாகும்.


வயிற்று வலி:

வெந்தயத்தை மோரில் ஊர வைத்து சாப்பிட வயிற்று வலி தீரும்.

குடல்புண்:

மாதுளை பழம் அடிக்கடி சாப்பிட குடல்புண் குணமாகும்.


அஜீரணம்:

வெந்நீரில் சீரகம் கலந்து குதித்து வர அஜீரணம் தீரும்.

மூலம்:

கருணை கிழங்கு லேகியம் சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

அழகு குறிப்புகள் - Part 1



1.மாலையில் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பியதும் கற்றாழாய் gel 20 நிமிடம் தடவி ஊறவைத்து முகம்கழுவவுமஂ. முகம் வெளுக்கும்  1 மாதத்திலேயே.

2. பற்களில் மஞ்சள் நிறம் மாற கொஞ்சம் உப்பயும், எலுமிச்சை சாராயும்   பற்கள் மீது  தடவி வந்தால்பற்கள் பிரகாசிக்கும்.


3. புருவம் அடர்த்தியாக வளர விளக்கென்ணையை இரவில் தடவி வரவும்.


4. முகம் வறட்சி இன்றி இருக்க தயிறை முஉகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து  குளிக்கவும். முகம் பளபளப்பாகமாறும்.


5. உதடுவெடிப்பு வராமல் தடுக்க தண்ணீர் நிறாயா குடிக்கவும்.


6. வாரம் இரு முறை தலைக்கு வெந்தயத்தை  அரைத்து குளிக்கவும்.

Jodhida Parihaarangal-Part 1


1. Nammudaya jadhagathil Sevvai neesam,vakramaha irundhaal vibathukkal yerpadalam.adhanal blood loss agalam.so, naam ahanai thavirka ratha dhanam seidhidlam.Ratha dhanam seiyya mudiyadhavargal blood bank lerndhu vangi dhanam seiyalam.



2.Veedu, Plot sammandhamana prachanaihaluku thiruchendhoor muruganayum,varahi ammanayum sevvai kizhamaihalil vanangi vandhaaal prachanaihal vilagi vidum.



3.Guru jadhagathil  neesam,vakramaha irundhaal padipil thadai varum.adharku poor students kku tution freeyaga edukkalam.aanmeega books donate seiyalam.

4.Sukran jadhagathil  neesam,vakramaha irundhaal panam varuvadhil thadai Yerpadum.Aharku kalyanam agadha Yezhai pengalukku mangalyam vaangi tharalam.thirumanathirku porul udhavi seiyyalam.

5. Raghu  jadhagathil  kettirupin durgai ammani vazhipadalm.Gomedhaga karkal nadu viralil jodhidarin alosani petru aniyalam.

6.Kedhu jadhagathil  kettirupin Vinayaga perumaalai sevvai kizhamaigalil vazhipadalam. Color thunigalai dhanam seiyyalam.

Useful Kitchen Tips for all


1.  Puliyai daily karaipadhai vida puli paste seidhu vaithu kondal time michamahum.,puliyum waste agadhu.


2. Poondai vaanaliyil vadhaki vittu thol orithal elimiyaha orikka varum.


3. Mullangi samaikum bodhu oil vadhaki seidhal sali pidikadhu.


4. Kothamali, Karuvepiliyei ilaigalai thani thani paperil sutra coveril pottu fridgeil vaithal neenda naatkal kedamal irukkum.


5. Idlikku araikum bodhu siridhu javvarisi sethu araithal idli poo pola varum.


6.Pookalai coveril pottu vaipadhai vida dabbavil pottu vaikalam.

ஆன்மீக கதைகள்



ஒரு அதிரசம் எங்கே ?

சாது ஒருவர் வழியில புறா இறந்து கிடந்ததை பார்த்தார். அதை கையில் எடுத்து மெதுவாக தடவி கொடுத்தார். உடனே அதற்கு உயிர் கிடைத்து பறந்து சென்றது. இதை ஒரு சோம்பேறி பார்த்தான். இந்த சாதுவுடன் இருந்தால் நாம் எதற்காகவும் வேலை செய்ய வேண்டாம் என்று நினைத்தான். அதன் படி சாதுவிடம் தன்னை சிஷ்யனாக சேர்த்து கொள்ளுமாறு கேட்டான். அவரும் அதற்கு ஒப்பு கொண்டார். இருவரும் படகில் செல்ல தீர்மானித்தனர். சாது 4 அதிரசத்தை கொடுத்து தான் தியானம் செய்து விட்டு வருவதாக சொன்னார்.. அவர் திரும்பி வருவதற்குள் சோம்பேறி அதில் ஒன்றை சாப்பிட்டான்.. சாதுவும் திரும்பி வந்து அதிரசத்தில் ஒன்றை காணாது கேட்டார்.. அவனும் தனக்கு எதுவும் தெரியாதென்று சொன்னான்.. சாது அவன் தான் சாப்பிட்டு இருப்பான் என்று தெரிந்து கொண்டார். இருப்பினும் தெரியாதது போல் இருவரும் படகில் சென்றார்கள்.. சாது தன்னிடம் உள்ள காகிதத்தை கையில் வைத்து அதை ஒரு பறவையாக மாற்றினார்..  மனிதனும் " என்னது ஆச்சரியமா இருக்கே " என்றான்.. சாது " எனக்கு ஆச்சரியம், அதிரசம் காணாமல் போனது தான் " என்று சொன்னார்.. வழியில் சிறிது மணலை எடுத்து அதை 3 பங்காக பிரிக்க சொன்னார்... சிஷ்யனும் வெறுப்போடு 3 பங்காக பிரித்தான்.. சாது மணலை தங்கமாக மாற்றி '' இந்த 3 பங்கில் ஒன்று எனக்கு, மற்றொன்று உனக்கு, மூன்றாவது பங்கு அதிரசம் சாப்பிட்டவனுக்கு ' என்று சொன்னார். சோம்பேறியும் " நான் தான் அதிரசம் சாப்பிட்டேன், எனக்கு தான் இந்த தங்கம் சொந்தம் " என்று சொல்லிவிட்டு தங்க மணலை மூட்டையாக கட்டி எடுத்து கொண்டு ஒடினான்.. சாது நினைத்து கொண்டார் " சோம்பேறி மனிதன், உழைக்காமல் வேலை செய்ய வேண்டுமென்று நினைத்தான்..
எனது சக்தியால் தங்கம் மீண்டும் மணலாக மாறியது தெரியாமல் ஏமாந்து போனான்" என்றார்..

நீதி : உழைப்பவனுக்கு மட்டுமே செல்வம் கிட்டும் என்பது நிதர்சனமான உண்மை...
 

Aanmeega Kuripugal- Panam Porul Serkaiku

Aanmeega Kuripugal- Panam Porul Serkaiku 

கண் திருஷ்டி போக்கும் பைரவர் மூல மந்திரம் :

கண் திருஷ்டி  போக்கும் பைரவர் மூல மந்திரம் : மூல மந்திரம்   ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம்  ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம  இந்த மூ...