Wednesday, August 7, 2019

கண் திருஷ்டி போக்கும் பைரவர் மூல மந்திரம் :

கண் திருஷ்டி  போக்கும் பைரவர் மூல மந்திரம் :


bairavar

மூல மந்திரம் 

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் 

ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம 

இந்த மூல மந்திரத்தை 108 அல்லது 1008 முறை ஜெபித்து வர கண் திருஷ்டி  ஏற்படாமல் தடுக்கும். எதிரிகள் தொல்லை விலகும்.

Wednesday, July 17, 2019

வீட்டிலேயே வெந்தய கீரை பயிரிட வழிமுறை:

வீட்டிலேயே வெந்தய கீரை பயிரிட வழிமுறை:








1.முதல் நாள் இரவே வெந்தயத்தை ஊறவைத்து அடுத்த நாள் காலை
தண்ணீரை வடிகட்டவும்.
2.பின்பு தொட்டியில் மண் நிரப்பி ஊறவைத்து வெந்தயத்தை விதைக்கவும்.
3.பூவாளியால் தண்ணீர் விடவும்.
4.5 நாட்களில் கீரை முளைக்க ஆரம்பிக்கும்.
5.இது அனுபவ முறை ஆகும்.

வீட்டிலேயே தக்காளி செடி வளர்ப்பதற்கான வழிமுறைகள்:

வீட்டிலேயே தக்காளி செடி வளர்ப்பதற்கான வழிமுறைகள்:










1.முதலில் தக்காளி யை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதன் விதையை 
 தொட்டியில் போடவும்.
2. பின்பு மண் போடவும்.
3.திரும்ப தக்காளி விதையை தூவவும்.
4.மேலே மண் போட்டு மூடவும்.
5.தண்ணீர் பூவாளியால் விடவும்.
6.15 நாட்களில் செடி வளர ஆரம்பிக்கும்.

வீட்டில் கொத்தமல்லி செடி வளர்க்க :


வீட்டில் கொத்தமல்லி செடி வளர்க்க :


See the source image
See the source image















1.முதலில்  தனியா விதையை இரண்டாக உடைத்து இரவே ஊற வைத்து மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டி பின்பு அதை தொட்டியில் விதைக்க வேண்டும்.
2.நல்ல மண் தேர்நதெடுத்து அதில் விதைக்க வேண்டும்.
3.தண்ணீரை அப்படியே செடியின் மேல் ஊற்றாமல் பூவாளியில் தண்ணீர் விட வேண்டும்.
4.5 நாட்களுக்குள் கொத்தமல்லி துளிர் விட ஆரம்பித்து செழித்து வளரும்.
5.இது அனுபவ முறை ஆகும்.

Tuesday, July 16, 2019

சருமம் பளபளக்க

சருமம் பளபளக்க :

1.அலோ வேரா ஜெல் :

தினமும் 15 நிமிடம் .அலோ வேரா ஜெல் முகத்தில் தடவி வர முக வறட்சி நீங்கி சருமம் பள பளக்கும்.

2.உருளை கிழங்கு :

உருளை கிழங்கை முகத்தில்  தடவி வர கரும் புள்ளிகள் நீங்கும்.

3.தயிர் :

 வறண்ட சருமத்தில் தடவி வர முகம் குளிர்ச்சி அடையும்.

4. பன்னிர் :

முகத்தை பொலிவுடன் வைக்கும்.புத்துணர்ச்சி அளிக்கும்.

5. தக்காளி :

தினமும் 15 நிமிடம் தக்காளியை அரைத்து தடவி வர முக வறட்சி நீங்கி
சருமம் பள பளக்கும்.

Saturday, July 13, 2019

Risk - Free Investment options

Risk - Free Investment options:

1. RD- Recurring Deposit in a nationalised Bank.

2. PPF- Start with your nearest Post office.

3. GOLD- Gold saving Scheme Eg: Lalitha Jewellery 11 month scheme. They give one month installment free to uers.

4.Real Estate- If you have a large amount invest in real estate.

5.FD - if you have a bulk amount invest in FD .It will give more returns than your deposit.

Wednesday, July 10, 2019

இரவில் நன்றாக தூக்கம் வர:

இரவில் நன்றாக தூக்கம் வர:









See the source image









1. தூங்க செல்வதற்கு முன்பு கதகதப்பான பாலில் தேன் விட்டு சாப்பிட தூக்கம் நனறாக வரும்.

2. வெளிச்சம் கம்மியாக உள்ள அறையில் தூங்கவும்.

3.செர்ரி பழங்களை இரவில் சாப்பிட்டஆல்  நல்ல தூக்கம் வரும்.

4. ஜாதிக்காயை பாலில் கலந்து சாப்பிட அமைதியான தூக்கம் வரும்.

5.தயிரை தலையில் தடவி குளித்து வந்தால் உடல் சூடு நீங்கி நல்ல தூக்கம் வரும்.




பணத்தை சேமிப்பது எப்படி:

பணத்தை சேமிப்பது எப்படி:

See the source image


















1. முதலில் வருமானத்தை  விட அதிக செலவு செய்வதை  குறைக்கவும்.

2. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்கவும்.

3. மளிகை வாங்க செல்லும் போது மளிகை லிஸ்டோடு சென்று மொத்தமாக வாங்கினால் செலவு குறையும்.

4. ஹோட்டல் உணவுகளை தவிர்த்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடவும். இதனால் செலவும் குறையும்.உடல் நலமும் கெடாது.

5. போக்குவரத்திற்கு  பொது வாகனங்களை பயன்படுத்தவும். இதனால் பெட்ரோல்  செலவு கணிசமாக குறையும்.

6.முடிந்த அளவு எந்த ஒரு கெட்ட  பழக்கங்களும்  இல்லாமல் வாழுங்கள்.

7.பணத்தை வீட்டில் வைத்து பூட்டாமல் வங்கியில் சேமிப்பதால் அதற்கான வட்டி கிடைக்கும்.இதனால் சேமிப்புஉம் அதிகரிக்கும்.

8.ஆடை, துரித உணவுகளில்  பணத்தை அதிக அளவு செலவு செய்யதீர்கள்.

9. கேன் தண்ணீர் வாங்காதீர்கள்.வாட்டர் புரிபியர் பயன்படுத்துங்கள்.

10. குழந்தைகளுக்கு உண்டியல் வாங்கி தந்து சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.







தொப்பையை குறைப்பது எப்படி :

தொப்பையை குறைப்பது எப்படி :

1. தினமும் காலை  எலுமிச்சை சாறு வெறும் வயிற்றில் பருகி வர தொப்பை மறையும்.



Image result for belly fat

Image result for belly fat









2. தினமும் உணவில் பூண்டு அதிக அளவில் சேர்த்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்.

3.வெந்நீர் அதிக அளவு குடித்து வந்தால் கொழுப்பு கரைந்து உடல் மெலியும்.

4. பப்பாளி கூட்டு செய்து வாரம் ஒரு நாள் சாப்பிட தொப்பை கரையும்.

5. இரவு உணவை குறைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

6. கொள்ளு ரசம் அடிக்கடி சாப்பிட்டு வர தொப்பை மறையும்.


Tuesday, July 9, 2019

நவகிரஹங்களும் அதற்கான வண்ணங்களும், ரத்தினங்களும் :

நவகிரஹங்களும் அதற்கான வண்ணங்களும், ரத்தினங்களும் :



1.சூரியன் :
      சிவப்பு நிற வஸ்திரம்,,மாணிக்கம்
2.சந்திரன்:
    வெண்மை நிறம், முத்து
3.செவ்வாய் :
  சிவப்பு நிறம், பவளம்
4.புதன் :
    பச்சை நிறம்,பச்சை கல் மோதிரம்.
5.குரு :
    மஞ்சள் நிறம்,கனக புஷ்பராகம்
6.சுக்கிரன் :
வெண்மை நிறம்,வைரம்
7.சனி :
கருப்பு நிறம், நீல கல்
8.ராகு :
கருப்பு நிறம் ,கோமேதகம்
9.கேது :
பல வர்ண நிறங்கள் , வைடூரியம்.

Monday, July 8, 2019

12 ராசி கோவில்கள்

12 ராசி கோவில்கள் :

1. மேஷம் - ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாத ஸ்வாமி திருக்கோவில் .

2. ரிஷபம் - திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில் .

3.மிதுனம் - பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் .

4.கடகம்ராமேஸ்வரம் ஸ்ரீ நந்தனார் கோவில்.

5.சிம்மம் - ஸ்ரீ வாஞ்சியம் திருக்கோவில் .

6.கன்னி- திருக்கழுக்குன்றம் சிவன் கோவில்.

7.துலாம்-திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் .

8.விருச்சிகம் -காஞ்சி  ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்

9.தனுஷு - மாயவரம் மயூரநாதர் திருக்கோவில்

10.மகரம் - தில்லை நடராஜர் கோவில் 

11.கும்பம் - ராமேஸ்வரம் அருகில் உள்ள தேவிபட்டினம் 

12.மீனம்- வைத்தீஸ்வரன் கோவில்.

ராசி தெரியாதவர்கள் திருபுவனம் சரபேஸ்வரரை வருடத்திற்கு ஒருமுறை  சென்று வழிபடலாம்.


Thursday, June 27, 2019

குமரகோட்டம் முருகன் கோவில் -காஞ்சிபுரம்

குமரகோட்டம் முருகன் கோவில் :

இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.இத்தலத்தின் நுழைவாயிலில் காட்சிதரும் விநாயகப் பெருமானின் பேர்ருவத்தை தரிசித்து ஆசிபெற்ற பின்பு ஆலயத்திற்குள் செல்கின்றனர். மூலவர் சுப்ரமண்ய சுவாமி ருத்ராட்ச மாலையுடனும், கையில் கமண்டலமும் கொண்டு தரிசனம் தருகிறார். இடப்புறமும், வலப்புறமும் வள்ளி, தெய்வானை தேவியர்கள் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். இவரது வலக்கரம் அபயமாகவும், இடக்கரம் ஊரு முத்திரையும் கொண்ட எழில் தோற்றத்துடன் உள்ளது.
பிரமனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் குட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி.

தலத்தின் தனி சிறப்பு:

நாகசுப்ரமண்யரின் திருமேனிக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் நின்றுள்ளதோடு, வள்ளி-தெய்வானை உலாத் திருமேனிகளுக்கு மூன்று தலை நாகம் குடை பிடிப்பது போலும் காட்சிதருகிறது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கும், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளதால் இது சோமசகந்தரை பூர்த்திசெய்வது போல் அமைந்துள்ளது.

அருணகிரிநாதர் முருகன் கோவிலுக்கு வழி தெரியாமல் நின்ற போது முருகனே சிறுவன் வடிவில் வந்து கோவிலுக்கு அழைத்து வந்து தரிசனம் தந்துள்ளார்.

Motivational Quotes in tamil part-2

1.இந்த உலகம் ஓடிக்கொண்டே இருக்கும். உன்னை வெற்றியை தடுக்கும் சக்தி எவனுக்கும் இல்லை.

2.ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள். -இங்கர்சால்

3.உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண். - சாக்ரடிஸ்

4.ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது! -அம்பேத்கர்

5.இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.

6.எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

7.விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்- செ.கு.வாரா

8. மனிதன் நம்பிக்கையின்றி ஒரு நொடி வாழ்வது கூட வீண்.

9. உன்னை வெறுபவர்களுக்கு நீ கொடுக்கும் தண்டனை அவர்கள் கண் முன் வாழ்ந்து காட்டுவதே ஆகும்.

10. பிறப்பு இறப்பு மட்டுமே நம்மை தேடி வரும். மற்றதை நாம் தான் தேடி செல்ல வேண்டும்.

Motivational quotes of famous people in tamil - Part 1

1.அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மாம் அன்பு செலுத்த முடியாது. - அரிஸ்டாட்டில். 


2.தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஒளவையார்

3.நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள். 

4.எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

5.தாங்கள் செய்யும் தவறுகளுக்கு, அவரவர்கள் சூட்டிக்கொள்ளும் அருமையான பெயர் தான் அனுபவம். -கென்னடி

6.கண் பார்வை அற்றவன் குருடன் அல்ல, தன் குற்றங்களை உணராதவனே குருடன் – காந்திஜி

7.செல்வம் இருந்தால்,உன்னை உனக்குத் தெரியாது;செல்வம் இல்லாவிட்டால்,உன்னை யாருக்கும் தெரியாது -கதே

8.பணத்தின் மதிப்பு உனக்கு தெரிய வேண்டுமானால், எங்கேயாவது போய் கடன் கேட்டுப் பார் -பெஞ்சமின் ப்ராங்க்ளின்.

9.சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

10.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

Wednesday, June 26, 2019

வரதராஜ பெருமாள் - அத்தி வரதர் காஞ்சிபுரம்




வரதராஜ பெருமாள் - ஸ்ரீ அத்தி வரதர் காஞ்சிபுரம்
திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள்
கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக  முக்கியத்துவம் வாய்ந்த தலம. இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில்  அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

மூலவர், வரதராஜர் (தேவராஜர்), தாயார், பெருந்தேவி. திருமங்கை மன்னனும், பூதத்தாழ்வாரும் பாடிய தலம்.பிரம்மாவின் யாக அக்னியில் கிடைத்த மூர்த்தி, இங்கு முகத்தில் தழும்புடன்
உற்சவராக இருக்கிறார். இதனால், இவருக்குப் படைக்கும் நைவேத்யத்தில்
மிளகாய் சேர்ப்பதில்லை. இவரே இங்கு பிரதானம் பெற்றவர் என்பதால்,
பக்தர்கள் இவரைத் தரிசித்து விட்டே மூலவரைத் தரிசிக்கிறார்கள.
பிரம்மா பிரதிஷ்டை செய்த அத்திவரதரை அனந்தசரஸ் தீர்த்தத்திற்குள் வைத்துள்ளனர். அத்தி எனப்படும் மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில்  பள்ளி கொண்டிருக்கிறார்.
பிரம்மா நிறுவிய அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசிக்கலாம். 1938, 1979 ஆம் ஆண்டுகளில் வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் 2019 ல் இத்தகைய தரிசனம் கிட்டும்!
முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து 48 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும்.  அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.
சக்கரத்தாழ்வார் : திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என
பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும்
காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி
தருகின்றது.இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி  காட்சியளிக்கின்றார்.
தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால்
பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தீர்கின்றன.குழந்தை வரம்
வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர்.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஏறத்தாழ 3 கிலோமீட்டரில் அமைந்துள்ளது.



புதன் கிரக தோஷம் நீக்கும் ஸ்தலம் திருக்காலிமேடு

திருக்காலிமேடு:






See the source image













புதன் கிரக தோஷம் நீக்கும் ஸ்தலம் திருக்காலிமேடு. இந்த
 ஸ்தல்த்தின் இறைவன் சத்தியநாத சுவாமி. செம்மணலால் ஆன லிங்கம். அம்பிகை திருநாமம் பிரம்மராம்பிகை. இந்த கோவிலை இந்திரன் வந்து வணங்கி பெரும் பேரு பெற்றார். இந்த கோவிலில் இந்திர தீர்த்தம் உள்ளது.

சந்திரனிற்கும், குருவின் மனைவிக்கும் பிறந்தவர் புதன். இதனால் மனம் வருந்திய புதன் ஸ்தல்த்தின் இறைவன் சத்தியநாத சுவாமியை வணங்கி நவக்கிரகங்களில் ஒன்றாகும் பேறு பெற்றார். 

புதன் கிரக தோஷம் நீக்கும் ஸ்தலம்:

புதன்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, புதனுக்கு பச்சைத் துணி சாத்தி, பச்சைப் பயறு படைத்து வழிபட்டால் புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

 இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.

Tuesday, June 25, 2019

துர்கை காயத்ரி மந்திரம்.

துர்கை காயத்ரி மந்திரம்:

ஓம் காத்யாயனய வித்மஹே 
கன்யாகுமாரி தீமஹி 
தன்னோ துர்கி ப்ரசோதயாத்

durgaஇந்த மந்திரத்தை 108 முறை கூறி வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒழியும். தடைகள் நீங்கி காரிய வெற்றி கிடைக்கும்.

 செவ்வாய், வெள்ளி கிழமை, ராகு காலத்திலும் கூறலாம்.

செய்வினை, மாந்திரீக ஏவல்கள் மற்றும் துஷ்ட சக்திகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். குடும்பத்தில் பொருளாதார கஷ்ட நிலையை அறவே நீக்கும். சுபிட்சங்கள் பெருகும்.

சக்தி வாய்ந்த ஸ்ரீ கால பைரவர் மஹா மந்திரம்

சக்தி வாய்ந்த ஸ்ரீ கால பைரவர் மஹா மந்திரம்:

kaala bairavarமஹா மந்திரம்:


ஓம் ஹ்ரீம் பும் பாதுகாய அபதூதாரணாய குரு குரு பாதுகாய ஹ்ரீம் ஓம் நமஹ ஷியாயே ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் க்ஷம் க்ஷேத்திரபாலாய கால பைரவாய நமஹ.

ஸ்ரீ கால பைரவரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 27 முறை கூறி வழிபட வேண்டும். இவரை வணங்கினால் நமக்கு ஏற்பட இருந்த தீவினைகள் நீங்கும். மனதிலிருந்த வீண் அச்சங்கள் ஒழியும். 

குறிப்பாக மரணத்தை குறித்த பயங்கள் நீங்கும். வறுமை ஏற்படாமல் காக்கும். நவகிரக தோஷங்கள் நீங்கும்.




















கண் திருஷ்டி போக்கும் பைரவர் மூல மந்திரம் :

கண் திருஷ்டி  போக்கும் பைரவர் மூல மந்திரம் : மூல மந்திரம்   ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம்  ஹரௌம் க்ஷம் க்ஷத்ரபாலாய நம  இந்த மூ...